புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு விமானம் மூலமாக 5 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திவந்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட நபருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஷிரான் குணரத்ன மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார். புத்தளம் கற்பிட்டி முஸ்லிம் கிராமத்தைச் சேர்ந்த...ஒருவருக்கே மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இவர் திருமணமாகாதவராவார். பிரதிவாதி 1989ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம் திகதி 5 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தி வந்தபோது கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்தார்.

தனது பயணப்பொதியில் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து பிரதிவாதி போதைப்பொருளை கடத்தி வந்துள்ளார் என விசாரணைகளின் போது தெரிவிக்கப்பட்டது

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top