புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

யப்பானில் கடந்த வருடம் ஏற்பட்ட சுனாமியின்போது கடலில் அடித்துச் செல்லப்பட்ட யப்பானிய மீன்பிடி படகு ஒன்று பிரிட்டிஸ் கொலம்பிய கடலை வந்தடைந்து உள்ளது என்று அடையாளம் காணப்பட்டு உள்ளது.அமெரிக்க செனட்டர் ஒருவர் இத்தகவலை வெளியிட்டு
உள்ளார்.50 மீற்றர் கொண்டது இப்படகு. Haida Gwaii என்கிற இடத்தில் இருந்து 200 மீற்றர் தொலைவில் உள்ளது என அடையாளம் காணப்பட்டு உள்ளது என வொஷிங்டன் செனட்டர் Maria Cantwell தெரிவித்து உள்ளார்.

இப்படகு யப்பான் உடையதுதான் என்று யப்பானிய அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளார்கள் என்றும் படகின் வேகம், நகர்வு ஆகியவற்றை பார்க்கின்றபோது கரையை அடைய இன்னும் 50 நாட்களுக்கு மேல் எடுக்கும் என்றும் இவ்வதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

யப்பானிய சுனாமியில் அகப்பட்டு மிஞ்சி இருக்கின்ற மிகப் பெரிய எச்சமாக இப்படகு நம்பப்படுகின்றது.

2014 ஆம் ஆண்டுக்கு முன் இவ்வாறான எச்சங்கள் பிரிட்டிஸ் கொலம்பியாவை வந்தடையும் என்று விஞ்ஞானிகள் எதிர்வு கூறி இருந்தார்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top