புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இத்தாலியில் கோஸ்டா கன்கார்டியா என்ற சொகுசு கப்பல் கடலில் மூழ்கியதில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நிகழ்ந்து இரண்டு மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், மேலும் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இத்தாலியைச் சேர்ந்த கோஸ்டா கன்கார்டியா என்ற மிகப்பெரிய பயணிகள்.

கப்பல் ஒன்று ரோம் நகர் அருகே உள்ள தீவு ஒன்றில் பாறையில் மோதியதில் கடந்த ஜனவரி மாதம் 14ம் திகதி தரை தட்டி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் 30-க்கும் மேற்பட்‌‌டோர் பலியாயினர்.

நாலாயிரத்துக்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்நிலையில் 70 நாட்களுக்கு பின்பு கப்பலின் முழ்கிய பகுதியில் இருந்து நேற்று மேலும் 5‌ பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

இன்னும் 2 பேர் உடல்களை தேடும் பணி நடந்து வருவதாக பாதுகாப்புபடையினர் கூறினர். முன்னதாக விபத்து நடந்து போது கப்பலில் இருந்து வெளியேறிய கேப்டன் கைது செய்யப்பட்டார்.

கப்பல் தட்டிய பாறை குறித்து கப்பலில் இருந்த பாதை வரைபடங்களில் குறிப்பிடப்படவில்லை என கேப்டன் குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top