புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

உங்கள் கணினி திரையினை படம் பிடிக்க எடுக்க பல்வேறு வகையான மென்பொருட்களை பயன்படுத்துவீர்கள். அனைத்து மென்பொருட்களுமே ஒரு வகையில் சிறந்ததாக இருக்கும். ஆனால் அதில் உள்ள அனைத்திலும் ஒரு குறை கணினி திரையினை படம்பிடித்தால் மவுஸின் அம்பு குறி
இருக்கும். இதை தவிர்க்க என்ன செய்வீர்கள் சிலர் மவுஸினை திரையின் ஒரு ஓரத்திற்கு கொண்டு போய் வைத்துவிட்டு திரையினை படம் பிடிப்பார்கள். இப்படி செய்யாமல் இந்த மென்பொருளை பயனபடுத்தினால் உங்களுக்கு வேண்டும் என்றால் மவுஸின் அம்புக்குறியோடும் இல்லாவிடில் அம்புக்குறியை வேறு கலருக்கோ அல்லது அம்புக் குறி இல்லாமலும் கணினி திரையினை படம் பிடிக்க முடியும். இந்த மென்பொருளின் பெயர் aeroshot

நீங்கள் ஏதாவது ஒரு கோப்பினை படம்பிடிக்க வேண்டும் என்றால் அதை திறந்து வைத்து கொண்டு எது வேண்டுமோ அதை நேரடியாக படம்பிடித்து கொள்ளலாம்.


இந்த மென்பொருளின் சிறப்புகள்


நீங்கள் படம்பிடிக்கும் கணினி திரையினை நேரடியாக உங்கள் யுஎஸ்பி ட்ரைவினில் சேமிக்க முடியும்.

எந்த வகை ரெசொல்யூசனில் வேண்டும் என்பதை நீங்களே தீர்மானிக்க முடியும்.

நீங்கள் வழக்கம் போல இந்த மென்பொருளை நிறுவி விட்டு உங்கள் விசைப்பலகையில் ( விசைப்பலகை = Key Board)  விண்டோஸ் கீ + பிரிண்ட் ஸ்கீரின் பட்டன்களை கொடுத்தால் இந்த மென்பொருள் இயங்கி நீங்கள் எங்கு சேமிக்க விரும்புகிறீர்களோ அங்கு சேமித்து விடும்.

இது ஒரு திறந்தநிலை மூல பொருள் என்பதால் காசு கொடுத்து வாங்க வேண்டும் என்ற கவலையில்லை

இந்த மென்பொருள் விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, மற்றும் 7 ஆகியவற்றில் இயங்கும்.

இந்த மென்பொருளின் அளவு வெறும் 256கேபி மட்டுமே.

இது ஒரு போர்டபிள் மென்பொருளாகும். தரவிறக்கி நேரடியாக உபயோகபடுத்த வேண்டியதுதான்

AeroShot மென்பொருள் தரவிறக்க சுட்டி -http://code.google.com/p/aeroshot/

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top