புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

முதன் முறையாக, மருத்துவத் துறையில், குடியை நிறுத்த நினைக்கும் குடிகாரர்களுக்கு உதவும் வகையிலான மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக டெலிகிராப் செய்தி கூறுகிறது.குடிக்கு அடிமையாகி அதில் இருந்து விடுபட நினைப்பவர், இந்த மாத்திரையை எடுத்துக் கொண்டால், அது, உடலில் ஆல்கஹாலைக் கேட்கும் மூளையின் செயல்பாடை நிறுத்தி, குடிக்க வேண்டும் என்ற தூண்டுதலை குறைக்கிறது. இதனால், குடிப்பதை நிறுத்த நினைப்பவர்கள் அதில் இருந்து எளிதாக வெளிவரலாம்.

குடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் போதோ அல்லது குடிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக எழும் போதோ ஒருவர் இந்த மாத்திரையைப் பயன்படுத்தலாம்.

இந்த மாத்திரையை மட்டும் எடுத்துக் கொள்வதோடு நின்று விடாமல், குடியை நிறுத்த நினைப்பவருக்கு உரிய கலந்தாய்வையும் அளிக்க வேண்டும். குடியினால் ஏற்படும் பிரச்சினைகளை மன அளவிலும், உடல் அளவிலும் ஒரே நேரத்தில் செலுத்தும் போதுதான் சரியான முடிவு நமக்குக் கிடைக்கும்.

இந்த மாத்திரையைப் பயன்படுத்தியவர்கள், இதனால், எங்களால் நினைத்தாலும் அதிகமாகக் குடிக்க இயலவில்லை, மேலும், குடிக்க வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளனர். ஒரு சில நாட்களிலேயே நாங்கள் குடிப்பது தானாகவே நின்றுவிட்டது என்று நல்லத் தகவலையும் அளித்துள்ளனர்.

பராகுவேயில் நடைபெற்ற ஐரோப்பியன் மனநல கழகக் கூட்டத்தில் இந்த மருந்து பற்றிய முழு அறிக்கையும் வெளியிடப்பட்டது. இந்த மருந்துக்கு தற்போது நல்மேபேன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இன்னும் இது ஆய்வக பரிசோதனையிலேயே இருக்கிறது. இது மருந்தாக விற்பனைக்கு வர இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top