புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

உயிர்க்கொல்லி நோய்களில் புற்றுநோயும் ஒன்று. இது 2900 ஆண்டுக்கு முன்பே தோன்றி இருப்பதை டாக்டர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
கரோடியாவில் உள்ள ஷாகிரேப் தொல்பொருள் அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த ஒரு மம்மி-யை டாக்டர்கள் குழு ஆய்வு செய்தனர். 20 வயது மதிக்கத்தக்க அந்த வாலிபர் எந்த நோய் பாதித்து இறந்தார் என பரிசோதனை செய்தனர்.

2900 ஆண்டுக்கு முன்பு இறந்த அந்த வாலிபரின் மூளை அகற்றப்பட்டு இருந்தது. உடல்நறுமணப் பொருட்களால் பூசப்பட்டு கெடாமல் பாதுகாக்கப்பட்டிருந்தது. மண்டை ஓட்டில் இருந்து மூக்கு துவாரத்தின் வழியாக பிசின் போன்ற ஒரு திரவம் ஊற்றப்பட்டு துணியால் சுற்றப்பட்டிருந்தது.

அந்த உடலை பரிசோதித்ததில் அவரது தோலில் லாங்கர் கான்ஸ் என்றழைக்கப்படும் செல்கள் இருந்தன. அவை, பல வகையாக பெருகி உடலில் நோயை உண்டாக்க கூடியவை. இதனால் அந்த மம்மியின் உடலில் எலும்பு மற்றும் மெல்லிய தசை பகுதிகள் பாதிக்கப்பட்டிருந்தது.

எனவே, இது ஒருவகை புற்றுநோய் என ஆய்வு மேற்கொண்ட டாக்டர் குழுவின் தலைவர் மிஸ்லாவ் கங்கா தெரிவித்துள்ளார். இது மிகவும் அரிதான புற்றுநோய் வகையை சேர்ந்தது. 5 லட்சத்து 60 ஆயிரம் இளைஞர்களில் ஒருவரை தாக்கும். பெண்களைவிட அது ஆண்களைதான் அதிகம் பாதிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த மம்மியை எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top