புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

நுண்ணறி அட்டை (SMART CARD - Carte à puce) இன் கண்டுபிடிப்பாளர் ROLAND MORENO ஞாயிற்றுக்கிழமை தனது இல்லத்தில் 66 வயதில் மரணமடைந்துள்ளார். இவர் கண்டு பிடித்த தொழில்நுட்பம் தொலைபேசி அட்டைகள் முதல் மருத்துவக் காப்புறுதி அட்டைகள் (carte Vitale) மற்றும்
வங்கி அட்டைகள் வரை...,

உலகெங்கும் பயன்படுத்தப்படுகின்றது. ஆனாலும் 1974ம் ஆண்டு இவர் கண்டு பிடித்த Carte à puce களின் உரிமம் மட்டுமே இவரிடம் உள்ளது. காரணம் இது கண்டுபிடிக்கப்பட்டு 30 வருடங்களாகி விட்ட நிலையில், எந்தக் கண்டுபிடிப்பும் கண்டுபிடிக்கப்பட்டு 20 வருடங்களின் பின்னர் பொதுவுடமையாக்கப்படும், ஆகையால் இவரது கண்டுபிடிப்பும் பொதுவுடமை ஆக்கப்பட்டு விட்டது.


இருப்பினும் இன்று முக்கியமான தொடருந்து மற்றும் மெட்ரோ போன்றவற்றிற்காக பாவிக்கப்படும் 'NAVIGO' அட்டைகள் மற்றும் தொடருந்து நிலையங்களில் வாடகை ஈருருளி பெறப் பயன்படும் 'VELIB' போன்ற அட்டைகளின் உரிமப் பணத்தை இவர் பெற்று வந்துள்ளார்.

இவர் தனது கண்டுபிடிப்புப் பற்றிக் கூறுகையில், 'நான் அடிப்படையில் ஒரு சோம்பேறி. பெரிதளவாக வேலைகள் எதனையும் செய்யாதவன். நான் அரை நித்திரைத் தூக்கத்திலேயே இதற்கான திட்டத்தை உருவாக்கினேன்' என்று கூறியுள்ளார்.

2000ம் ஆண்டில் தனது கண்டுபிடிப்பான Carte à puce இன் மூலம் மூன்று மாதங்களுக்குள் யாராவது களவு செய்து காட்டினால் ஒரு மில்லியன் பிராங்குகள் தருவதாகப் பந்தயம் கட்டியிருந்தார். யாராலும் அதனைச் செய்ய முடியவில்லை. தனது பந்தயத்தில் ROLAND MORENO வெற்றி பெற்றார்.

இவர் கடந்த சில வருடங்களில் புது தொழில் நுட்பத்துடன் கூடிய மிகவும் பாதுகாப்பான இணையத்தளச் சீட்டாட்டத் தளமொன்றை (ONLINE POKER) உருவாக்கினார். மேலும் 'மோசமான சூழலில் வெற்றி' என்று பொருள்படும் என்று ஒரு புத்தகத்தையும் எழுதியுள்ளார்.

இவர், சிறந்த தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்கான ஜேர்மனிய விருதான 'Prix Eduard Rhein' இனை 1996 இல் பெற்றிருந்தார். பிரெஞ்சுப் புரட்சியின் பின்னர் வழங்கப்படும் பிரான்சின் அதி உயர் விருதான Légion d'Honneur 2009 இல் பெற்றுள்ளார்.

'இவரிடம் இவரது அதி உயர்ந்த ஆசை எதுவென்று கேட்டபோது' ஏற்கனவே பிரபல அகராதிகளான Larousse மற்றும் Littré போன்றவற்றில் எனது பெயர் வந்துவிட்டது. உயர் தலைவர்களினதும் மிகவும் பிரபலங்களினதும் மெழுகு உருவச் சிலைகள் உள்ள Musée Grévin இல் எனது சிலையும் வைக்கப்பட வேண்டும்.'

என்றும் 'எப்படி இசை உலகக் கடவுளென்று கருதப்படும் Jean-Sébastien Bach இடம் அவரைப் படைத்த இறைவனே பெரிதும் கடன் பட்டுள்ளான் எனக் கூறுவது வழக்கமோ, அதேபோல் பிரெஞ்சு மக்கள் MORENO விடம் பெரிதும் கடன் பட்டுளார்கள் என எதிர்காலம் கூறவேண்டும்” என்று கூறியிருந்தார்.

இவரது கண்டுபிடிப்புக்களும் அதேபோல் மக்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாகவே அமைந்துள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top