புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

குள்ள உருவம் உடையவர்கள், சுய மரியாதையுடன் வாழ்வதற்கு வசதியான வகையில், அவர்களுக்கென அசாம் மாநிலத்தில் ஒரு கிராமம் உருவாக்கப்படவுள்ளது. இந்த கிராமத்தில் 70 குள்ள மனிதர்கள், குடியமர்த்தப்படவுள்ளனர். அவர்களுக்கு வசதியான வகையில், வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் பபித்ரா ராபா. இவர், ஒரு நாடக கலைஞர். நாடக குழு ஒன்றை நடத்தி வருகிறார். இந்த குழுவில், குள்ள உருவம் உடையவர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். குள்ள உருவம் உடையவர்கள், அன்றாட வாழ்வில் படும் சிரமங்களை உணர்ந்த இவர், நன்கு பயிற்சி அளித்து, நாடக கலைஞர்களாக அவர்களை மாற்றியுள்ளார்.

தனி கிராமம் :அடுத்த முயற்சியாக, குள்ள உருவம் படைத்தவர்கள், சுய மரியாதையுடனும், வசதியாகவும் வசிப்பதற்காக, அசாமின் உதல்குரி மாவட்டத்தில் ஒரு கிராமத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:குள்ள உருவம் படைத்தவர்களும், மற்றவர்களை போன்ற மனிதர்கள் தான். ஆனால், அன்றாட வாழ்வில் அவர்கள் சிரமங்கள் ஏராளம். அவர்களின் உருவத்துக்கு ஏற்ற வீடுகள் இல்லாததால், அவர்களால் வசதியாக வாழ முடிவது இல்லை. உடல் ரீதியான பல்வேறு சிரமங்களுக்கு அவர்கள் ஆளாகின்றனர்.

கேலி, கிண்டல் :படிக் கட்டுகளில் ஏறி இறங்குவது, குளியல் அறை, கழிப்பறைக்கு செல்வது, சமையல் செய்வது என, அனைத்தையுமே, சிரமத்துடன் தான் அவர்கள் செய்து வருகின்றனர். மேலும், கிண்டல், கேலிக்கு பயந்து கொண்டு, பொது இடங்களில் சகஜமாக நடமாடுவதற்கும் தயங்குகின்றனர். எனவே, இவர்கள், சுய மரியாதையுடனும், வசதியாகவும் வாழும் வகையில், அவர்களுக்கு தகுந்தாற்போன்ற வீடுகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.முழுக்க, முழுக்க, குள்ள உருவம் உடையவர்கள் மட்டுமே, அந்த கிராமத்தில் வசிக்க அனுமதி அளிக்கப்படும். 70 வீடுகள் கட்டப்படவுள்ளன. அதற்காக, அவை மிகச் சிறிய வீடுகளாக இருக்காது. அவர்களுக்கு தகுந்தாற்போல் இருக்கும். இந்தபணிகள் முடிவடைவதற்கு இன்னும் நான்கு ஆண்டுகளாகும். முதல் கட்டமாக, 30 பேர் குடியமர்த்தப்படவுள்ளனர். எங்களின் இந்த சேவைக்கு, மாநில அரசிடம் இருந்து, இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை. எனவே, விரைவில் மத்திய அரசை தொடர்பு கொண்டு, வீடு அமைக்கும் திட்டத்துக்கு நிதி உதவி அளிக்கும்படி வலியுறுத்தவுள்ளோம்.இவ்வாறு பபித்ரா ராபா கூறினார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top