புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இங்கிலாந்தில் மீண்டும் பொருளாதார சரிவு நிலை தொடங்கியுள்ளது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இங்கிலாந்தின் பொருளாதாரம் வீழ்ச்சியை கண்டுள்ளது.இங்கிலாந்து நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்திக்கிறது என்பதை,

சுட்டிக் காட்டும் புள்ளிவிபரங்கள் மிக மிக ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இந்தப் பொருளாதார சரிவுக்கு பிரதமர் டேவிட் கமரூன் மற்றும் நிதி அமைச்சர் ஜார்ஜ் ஆஸ்பர்ணுமே பொறுப்பு என அந்நாட்டின் எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

தற்போது தான் சரிவிலிருந்து மீண்ட அதன் பொருளாதாரம் மீண்டும் நெருக்கடியை சந்திப்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற தொடர் நெருக்கடியை 1970 ம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடைவையாக இங்கிலாந்து சந்திக்கிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top