புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

குடித்து விட்டு வந்து பெற்ற மகள் என்று கூட பாராமல் மோசமாக நடந்து கொண்ட தந்தையை அவரது இரு மகள்களும் சேர்ந்து கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்தனர். தங்களது மானத்தைக் காக்க இரு பெண்களும் செய்த இந்தக் கொலையைத் தொடர்ந்து போலீஸார்
அவர்கள் மீது வழக்குப் பதியவில்லை.

குடி குடியைக் கெடுக்கும் என்று சும்மா சொல்லவில்லை, அனுபவித்தே சொல்லியிருப்பார்கள் போல. குடிபோதையால் கெட்டழிந்தோர் பலர். இன்று பல குடிகாரர்கள், குடிபோதையில் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதைக் கூட அறியாத அளவுக்கு அதீதமாக குடித்து விட்டு அழிந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு சம்பவம் வேலூர் மாவட்டம் நெமிலி அசநெல்லிக்குப்பம் கிராமத்தில் நடந்துள்ளது.

இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன். 38 வயதான இவர் மாட்டு வண்டி ஓட்டி வருகிறார். இவருக்கு 36 வயதில் சூரியகலா என்ற மனைவி, 20 வயதில் நந்தினி, 19 வயதில் சிந்தாமணி, 16 வயதில் சிவரஞ்சி என மூன்று மகள்கள்.

நந்தினியும், சூரியகாவும் சென்னை அருகே வேலை பார்த்து வருகின்றனர். மோகன் குடிக்கு அடிமையானவர். எப்போது பார்த்தாலும் குடிபோதையில்தான் இருப்பார். குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவி, மகள்களை அடித்து தகராறு செய்வது வழக்கமாகும்.

இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு இரவு மோகனின் அண்ணன் பாபு வீட்டுக்கு வந்தார். வீடு வெளிப்பக்கமாக பூட்டியிருந்தது. ஆனால் அவருக்கு ஏதோ சந்தேகம் எழவே வீட்டுக் கதவை திறந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டுக்குள் மோகன் பிணமாக கிடந்துள்ளார்.

இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்து மோகன் உடலை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் அவர்களுக்குத் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.இதுகுறித்து மோகனின் மனைவி சூரியகலா போலீஸாரிடம் கூறுகையில்,

9ம் தேதி காலை நான், எனது மகள்கள் நந்தினி மற்றும் சிந்தாமணியுடன் வீட்டில் இருந்தேன்.அப்போது எனது கணவர் போதை அதிகமான நிலையில் வீட்டுக்குள் வந்தார்.

வந்தவர், குடிபோதை கண்ணை மறைக்க எனது மகள் நந்தினி மீது பாய்ந்து அவரை பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த நந்தினி தனது தந்தையின் கையைக் கடித்து விடுபட முயன்றார்.ஆனால் எனது கணவர் எழுந்திருக்கவில்லை. இதையடுத்து இளைய மகள் சிந்தாமணியும் எனது கணவரின் கையைப் பிடித்துக் கடித்தாள்.

அப்போதும் எனது கணவரின் காம வெறி அடங்கவில்லை. பெற்ற மகள் என்று கூட அவர் பார்க்கவில்லை. இதனால் கடும் கோபமடைந்த எனது இரு மகள்களும் துப்பட்டாவை எடுத்து தங்களது தந்தையின் கழுத்தை போட்டு இறுக்கிவிட்டனர். இதில் சிறிது நேரத்தில் அவர் இறந்து விட்டார்.

இதனால் மூன்று பேரும் அதிர்ச்சியடைந்து பயந்து போனோம். பின்னர் வீட்டைப் பூட்டிவிட்டு எனது தாயார் வீட்டுக்குப் போய்விட்டோம் என்றார்.

இதுகுறித்து போலீஸார்கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். இருப்பினும் கற்பைக் காத்துக் கொள்ள இரு மகள்களும் சேர்ந்து இந்தக் கொலையைச் செய்துள்ளதால் யாரையும் போலீஸார் கைது செய்யவில்லை.

இதேபோல சமீபத்தில் மதுரையில் ஒரு குடிகாரன், தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது அவனது மனைவி, தனது கணவரை அடித்துக் கொலை செய்தார். அப்போதும் அந்தப் பெண்மணி மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது நினைவிருக்கலாம்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top