புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

அனைத்து உலாவிகளிலும் குரோம் மிக வேகமாகச் செயல்படுகிறது என்றாலும், பழக்கத்தின் காரணமாக பலர் பயர்பொக்ஸ் உலாவியையே தொடர்ந்து பயன்படுத்திவருகின்றனர். இதற்கு வேறு சில காரணங்களும் உண்டு.இந்த உலாவிக்கென தயாரிக்கப்பட்டு இலவசமாக வழங்கப்படும் ஆட்
ஆன் தொகுப்புகள், இந்த உலாவியை பயன்படுத்துவதில் நமக்குப் பல வசதிகளை அளிக்கின்றன. இவற்றை நாம் விரும்பும்படி அமைப்பதும் மிக எளிதாக உள்ளது.

இவை மட்டுமின்றி அடிப்படையிலேயே பயர்பொக்ஸ் உலாவியை நாம் நம் விருப்பத்திற்கேற்ப அமைக்கலாம். இந்த வசதிகளைத் தரும் about:config பக்கம் பலர் செல்வதே இல்லை. இது ஏதோ மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பக்கம் என்றே நாம் ஒதுங்கி விடுகிறோம்.

இது மறைந்திருப்பதற்குக் காரணம் இதில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள், பயர்பொக்ஸ் இயக்கத்தினைப் பெரிய அளவில் மாற்றும் என்பதால் தான்.

ஆனால் இந்தப் பக்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதும், மீண்டும் அதனைப் பழைய நிலைக்குக் கொண்டு வருவதும் மிக எளிது.

இந்தப் பக்கத்தில் கிடைக்கும் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் நாம் குறிப்பிட்ட மதிப்பினை ஒதுக்கினால், அதற்கேற்ப பயர்பொக்ஸ் உலாவி செயல்படும். இந்த மதிப்பு எண்ணாகவோ, பெயராகவோ, சொல்லாகவோ இருக்கலாம். இவ்வாறு நம் வசதிகளுக்காக நாம் இதில் ஏற்படுத்தக் கூடிய சில மாற்றங்களை இங்கு காணலாம்.

முதலில் இந்த மாற்றங்களைக் கொண்டுள்ள மாறா நிலையில் உள்ள கோப்புக்கு ஒரு பக் கப் எடுத்து வைத்துக் கொள்ளலாம். அப்போது தான் ஏதேனும் தேவைப்படாத மாறுதல் ஏற்பட்டு, பயர்பொக்ஸ் வழக்கமாக, நாம் எதிர்பார்ப்பிற்கு மாறாக இயங்கினால் பக் அப் கோப்பை கொண்டு வருவதன் மூலம், பழைய நிலைக்குக் கொண்டு செல்லலாம்.

இந்த கோப்பின் பெயர் prefs.js. இதன் மூலம் பழைய நிலைக்குச் செல்ல முடியவில்லை என்றால், உலாவியை மீண்டும் நிறுவி வழக்கம் போல செயல்படலாம்.

முதலில் about:config பக்கத்திற்கு செல்வதற்கு பயர்பொக்ஸ் உலாவியை இயக்கி, அதன் முகவரிக் கட்டத்தில் prefs.js என டைப் செய்திடவும்.

உடனே எச்சரிக்கை செய்தி ஒன்று கிடைக்கும். இதில் மாற்றங்களை ஏற்படுத்தினால், வாரண்டி கிடையாது, இதன் இயக்கம், பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை போய்விடும். உங்கள் செயல்பாடு குறித்து நீங்கள் உறுதியாக இருந்தால் தொடரவும் என்று இந்த எச்சரிக்கை சொல்லும்.

அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று மனதில் எண்ணிக் கொண்டு, கிளிக் செய்து செல்லவும். கிடைக்கும் பக்கத்தில் filter என்று ஒரு கட்டம் கிடைக்கும். இதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த தேவையான கட்டளை வரியைப் பெறலாம். இனி about:config பக்கத்தில் நாம் ஏற்படுத்தக் கூடிய மாற்றங்களைக் காணலாம்.

1. பிரவுசரை வேகப்படுத்த:

பிரவுசரின் வேகத்தை அதிகப்படுத்த ஒன்றுக்கு மேற்பட்டவற்றில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். கீழே கொடுக்கப்பட்டது போல செயல்படவும்.

network.http.pipelining: இங்கே true என மாற்றவும்.

network.http.proxy.pipelining: இங்கே true என மாற்றவும்.

network.http.pipelining.maxrequests: இங்கே 8 என மாற்றவும்.

அடுத்து maxconnections என்பதனைத் தேடிபெறவும். இதில் network.http.maxconnections என்பதைப் பெறுவீர்கள். இதனை 96 என மாற்றவும்.

அடுத்து கிடைக்கும் network.http.maxconnectionsperserver என்பதில் மதிப்பை 32 என மாற்றவும்.

2. ஆண்ட்டி வைரஸ் ஸ்கேன் செய்வதை நிறுத்த: நீங்கள் பெரிய அளவிலான கோப்பை தரவிறக்கம் செய்கையில், அதனை ஸ்கேன் செய்வது, பயர்பொக்ஸ் இயக்கத்தினை தாமதப்படுத்தும்.

எப்படி இருந்தாலும் தரவிறக்கம் செய்த பின்னர் தனியாக அதனை ஸ்கேன் செய்யப் போகிறீர்கள். எனவே தரவிறக்கம் செய்கையில் ஸ்கேனிங் செயல்பாட்டினை நிறுத்தலாமே. இதற்கு “scan Whendone” என்பதனைத் தேடிப் பெறவும். இந்த கட்டளை வரி browser.download.manager.scanWhenDone என இருக்கும். இதன் மதிப்பை “false” என மாற்றவும்.

3. பாப் அப்களை டேப்களாக மாற்ற: பாப் அப் விண்டோக்கள் டேப்களாக இயங்க முடியாத நிலையில் இருந்தால், பயர்பொக்ஸ் அவற்றை பாப் அப் பெட்டிகளாகவே நடத்தும்.

இவற்றைத் தனி டேப்களில் திறக்கும் படி செட் செய்துவிடலாம். இதற்கு newwindow எனத் தேடவும். மூன்று முடிவுகள் வரிகளாகக் கிடைக்கும்.

இதில் browser.link. open_newwindow.restriction என்ற வரியின் மதிப்பை 0 என மாற்றவும்.

4. தானாக புக்மார்க்குகளைக் கொண்டு வர: பயர்பொக்ஸ் தானாகவே புக்மார்க்குகளை சேவ் செய்து, இன்னொரு புரோகிராமிற்கு மாற்றுகிறது. இந்த மாறா நிலை ஏற்பாட்டில், இவை வசதியான bookmarks.html என மாற்றப்படாமல், places.sqlite என மாற்றப்படுகிறது.

எளிதாக இன்னொரு இடத்திற்கு மாற்ற, autoExportHTML என்று டெக்ஸ்ட் கொடுத்துத் தேடவும். browser. bookmarks.autoExportHTML என்ற கட்டளை வரியின் மதிப்பை true என மாற்றவும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top