புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவு அருகே அசே பகுதியில் மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், மேற்கு வங்கம் உள்பட இந்தியாவின் பல பகுதிகளிலும் உணரப்பட்டது.பசிபிக் கடலில் நிலத்துக்கடியில் 30 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த
நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 8.7 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. இது மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கமாகும்.

இதையடுத்து அந்தமான் நிகோபார் தீவுகள் உள்ளிட்ட இந்தியாவின் கிழக்குப் பகுதிகள், உள்பட உலகம் முழுவதும் 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இலங்கையை 4.9 சுனாமி தாக்கும் எனவும் கொழும்பை 4.09 க்கும், திருகோணமலையை 4.21 க்கும், யாழ்பாணத்தை 6.01 க்கும் தாக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நிலநடுக்கத்தால் சென்னை, பெங்களூர், கொல்கத்தா உள்பட பல்வேறு நகர்களிலும் கட்டடங்கள் மிக பயங்கரமாக நடுங்கியதால் மக்கள் பீதியில் கட்டடங்களை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இந்தோனேஷியாவில் இதே பகுதியில் ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவிலான மிக பயங்கர நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி அலைகள் தமிழகம், இலங்கை உள்பட உலகம் முழுவதும் 2.3 லட்சம் பேரை பலி கொண்டது நினைவுகூறத்தக்கது.

இப்போதும் இந்த நிலநடுக்கத்தால் வங்கக் கடல், இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள 28 நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிலநடுக்கத்தை இலங்கை, தாய்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளி்லும் மக்கள் உணர்ந்துள்ளனர். முன்னதாக இந்த நிலநடுக்கத்தின் அளவு 8.9 ரிக்டராக இருந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இது 8.7 ரிக்டர் அளவுக்கே இருந்ததாக அமெரிக்க நிலவியல் ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

அந்நாடுகளாவன:
இந்தோனேஷியா / இந்தியா / இலங்கை / ஆஸ்திரேலியா / மியான்மர் / தாய்லாந்து / மாலத்தீவு / ஐக்கிய ராஜ்யம் / மலேசியா/ மொரிஷியஸ் / ரீயூனியன் / செய்செல்லெஸ் / பாகிஸ்தான் / சொமாலியா / ஓமன் / மடகாஸ்கர் / ஈரான் / UAE/ யேமன் / கோமொறேஸ் / வங்காளம் / டான்சானியா / மொசாம்பிக் / கென்யா / CROZET  தீவுகள் / கெர்யூலென் தீவுகள் / தென் ஆப்ரிக்கா / சிங்கப்பூர்

பசுபிக் சுனாமி எச்சரிக்கை நிலையத்தினால் இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு.





0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top