புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இன்று முதல் பிராஞ்சின் ஜனாதிபதித் தேர்தலுக்கான அதிகாரபூர்வப் பிரச்சாரம் ஆரம்பமாகின்றது. இன்று தொடங்கி 21ம் திகதி சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி வரை இது நீடிக்கும். அடுத்த நாள் காலை அதாவது 22ம் திகதி ஏப்ரல் மாதம் முதலாவது சுற்றுத் தேர்தல் இடம்பெறும்.இக்காலப் பகுதியில் அனைத்து
வேட்பாளர்களின் பிரச்சாரங்களும் மிகவும் கண்டிப்புடன் தேர்தல் சட்டங்களுக்கமையக் (Code electoral) கண்காணிக்கப்படும். இதன் மூலம் அனைத்து வேட்பாளர்களும் சரி சமமாகப் பார்க்கப்படுவார்கள்.

இவ்வருடம் 45 மில்லியன் மக்கள் வாக்களித்துத் தமது ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்காளர் அட்டையைப் பெற்றுள்ளனர். இது 2007ல் இடம்பெற்ற தேர்தலில் வாக்களித்தவர்களை விட சற்று அதிகமாகும்.

வரும் 13 நாட்களும் வீதிகளில், தொலைக்காட்சிகளில், தாபல் பெட்டிகளுக்கள் என்று எங்கு பார்த்தாலும் பிரச்சாரமயமாக இருக்கப்போகின்றது. மாநகரசபைகள் அனைத்து வேட்பாளர்களுக்கும் அவர்களது பிரச்சாரச் சுவரொட்டிகளை ஒட்டுவதற்கான இலக்கமிடப்பட்ட அறிவிப்புப் பலகைகளை ஒதுக்கியுள்ளது.

இதில் ஒவ்வொரு வேட்பாளரும் இரண்டு சுவரொட்டிகளை மட்டுமே ஒட்டமுடியும். இது நாடு முழுவதும் ஒரே சுவரொட்டியாக இருப்பது அவசியம்.

சுவரொட்டியில் வெள்ளையாக வெறுமையான இடத்தையோ அல்லது சுவராட்டியின் ஓரங்களில் வெள்ளைப் பகுதிகளையோ (Border) அமைத்தல் மற்றும் பிராஞ்சின் தேசியக்கொடியின் மூன்று நிறங்களைச் சேர்த்துப் பாவித்தல் என்பன தடைசெய்யப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top