புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தன்னை விட்டுவிட்டு வேறொரு பெண்ணை
காதலித்ததால் ஆத்திரம் அடைந்த பெண் மருத்துவர், காதலனின் எல்லா பற்களையும் பிடுங்கி எறிந்தார்.போலந்து நாட்டை சேர்ந்தவர் அன்னா மேகோவியக்(வயது 34). இவர் ஒரு பல் மருத்துவர், மாரெக் ஓல்சிவிகி என்பவரை காதலித்தார்.

திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அன்னாவை பிரிந்து சென்ற மாரெக் வேறொரு பெண்ணுடன் சுற்ற தொடங்கினார். இதனால் ஆத்திரம் அடைந்தார் அன்னா.

இந்நிலையில் பல் வலியால் துடித்தார் மாரெக். பழைய காதலி பல் மருத்துவர் தானே என்று நினைத்து சமீபத்தில் அவரது மருத்துவமனைக்கு சென்றார். ஏற்கனவே கோபத்தில் இருந்த அன்னா, தன்னை ஏமாற்றிவிட்டு போன காதலனை பழிவாங்க இதுதான் தக்க நேரம் என்று நினைத்தார்.

மாரெக்கின் பற்களை சுற்றி பல மயக்க ஊசிகளை போட்டார். அவருடைய வாய் பகுதி மரத்துப் போனதும், சிகிச்சை அளிக்க தொடங்கினார் அன்னா. பாதிக்கப்பட்ட பல்லை எடுத்து விட்டதாக கூறினார்.

அத்துடன் அவர் வாய் திறக்க முடியாதபடி தலையுடன் சேர்த்து கட்டுப் போட்டு அனுப்பினார். ஒரு நாள் கழித்து கட்டை அவிழ்த்து விடலாம் என்று கூறி அனுப்பினார். தான் கைவிட்டாலும், மருத்துவர் என்ற முறையில் காதலி சிகிச்சை அளித்ததை நினைத்து சந்தோஷப்பட்டபடி வீட்டுக்கு சென்றார் மாரெக்.

பின்னர் தலையில் கட்டை அவிழ்த்து வாய் திறந்து பார்த்த போது, வாயில் ஒரு பல் கூட இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். எல்லா பற்களையும் அன்னா பிடுங்கி போட்டிருந்தார்.

இதுதொடர்பாக பொலிசில் மாரெக் புகார் கொடுத்தார். எனக்கு அப்போதே சந்தேகம் வந்தது. வாயில் பல்லே இல்லாதது போல் உணர்ந்தேன். ஆனால், தலையை சுற்றி கட்டுப் போட்டுவிட்டதால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று பொலிசில் கூறியுள்ளார்.

இதையடுத்து அன்னாவை பொலிசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர் கூறுகையில், மாரெக்கை பார்த்ததும் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை. அதனால்தான் அப்படி செய்தேன். என்னை கைவிட்டதற்கு பழி வாங்கிவிட்டேன் என்று கூறியுள்ளார்.

மருத்துவ நெறிமுறைகளை மீறியது, நோயாளியின் நம்பிக்கையை தவறாக பயன்படுத்தியது உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் அன்னா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top