புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

வாடகைக்கு வீடு தேடும் தோரணையில் வீடொன்றிற்குள் நுழைந்து அவ் வீட்டிலிருந்த மூதாட்டியின் கழுத்தை நெரித்து கை, கால்களை கட்டி வைத்து விட்டு தங்க நகைகள் உட்பட பெறுமதி வாய்ந்த பொருட்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவமொன்று கொழும்பு ஆமர்வீதி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஆமர்வீதி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த 70 வயதுடைய பரமேஸ்வரி நடராஜா என்ற மூதாட்டியின் வீட்டிலேயே இக்கொள்ளைச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

அவரிடமிருந்த ஐந்தரை பவுண் தங்க நகைகளும் கையடக்க தொலைபேசி மற்றும் டீ. வீ. டி. போன்றவையே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மூதாட்டி தெரிவிக்கின்றார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு 7.30 மணியளவில் குறித்த மூதாட்டியின் வீட்டிற்கு வந்த இருவர் வாடகைக்கு வீடு பார்க்க வந்ததாகக் கூறி வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

அதன் போது தனது வீடு ஏற்கனவே வேறொருவருக்கு வாடகைக்குக் கொடுத்துள்ளதாக மூதாட்டி கூறியுள்ளார். அதற்கு அச்சந்தேக நபர்கள் இருவரும் உங்களுடைய மகள் தான் எங்களை வீடு பார்க்க அனுப்பினார் மற்றதையெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என கூறியுள்ளனர்.

இந்த தாட்டியின் மகள் மற்றும் மகன்மார்கள் அப்பகுதியிலேயே வேறு வேறு இடங்களில் வசித்து வருகிறார்கள். சந்தேக நபர்கள் கூறியதைக் கேட்ட மூதாட்டி அவர்களை உள்ளே அனுமதித்ததுடன் அவர்களிடம் கதைக்கவே, சந்தேக நபர்களில் ஒருவர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார்.


தண்ணீர் எடுப்பதற்காக மூதாட்டி சமையலறைக்குச் சென்ற போது பின்னால் சென்ற சந்தேக நபர்கள் அம் மூதாட்டியின் கழுத்தை நெரித்து கை, கால்களை கட்டி விட்டு மூதாட்டியின் முகத்தை பிளாஸ்ரர் ஒன்றினால் ஒட்டி மறைந்து விட்டு கைகளில் இருந்த மூன்று காப்புகளையும் மோதிர மொன்றினையும் தோட்டினையும் கழற்றிக் கொண்டு வீட்டிலிருந்த அவருடைய கையடக்கத் தொலைபேசி மற்றும் டீ. வீ. டி இயந்திரம் ஆகியவற்றையும் எடுத்துக் கொண்டு மூதாட்டியை தாக்கி சமையலறையில் தள்ளி விட்டு சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

அதன் பின்னர் அந்த மூதாட்டி மெல்ல மெல்ல நகர்ந்து சமையலறையிலிருந்து முன் அறைக்கு வந்ததுடன் “மிகவும் கஷ்டப்பட்டு ஓரளவு சத்தமெழுப்பியுள்ளார். அதனைக் கேட்ட அயல் வீட்டு பெண் உடனே வீட்டிற்குள் வந்து பார்த்து சத்தமிட்டதையடுத்து அந்தத் தோட்டத்தில் உள்ளவர்கள் ஒன்று திரண்டு மூதாட்டியின் முகத்தில் ஒட்டப்பட்டிருந்த பிளாஸ்ரரையும் கை, கால்களில் கட்டப்பட்டிருந்த பட்டிகளையும் கழற்றியுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட அந்த மூதாட்டி அதன் பின்னர் தனது மகளுக்கு தொலைபேசியில் இவ்விடயம் தொடர்பாக அறிவிக்கவே உடனடியாக அந்த மூதாட்டியின் மகள் அங்கு வந்து அவரை அழைத்துக் கொண்டு ஆமர் வீதியில் உள்ள பொலிஸ் காவலரணுக்கு சென்றுள்ளார்.

அங்கு பொலிஸார் கொட்டாஞ்சேனை பொலிஸில் சென்று முறைப்பாடு செய்யுமாறு கோரவே அவர்கள் அங்கு சென்று முறைப்பாடு செய்தார்கள். அதன் பின் மூதாட்டி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் திடீர் விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top