புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பொதுவாக கடல் கன்னிகளைப் பற்றின கதைகள் இன்று வரை மர்மமாகவே இருந்து வருகின்றன. ஆனால் நிஜ வாழ்க்கையில் கடல் கன்னிகளாக செயல்படும் பெண்களும் காணப்படுகின்றன.அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தில் காணப்படும் Weeki Wachee Springs என்ற
பூங்கா மிகவும் பழைமையானது மட்டுமின்றி பல அதிசயங்கள் நிறையப் பெற்றதும் ஆகும்.

அத்துடன் காண்பவர்கள் அனைவரையும் ஈர்க்க கூடியது. 430 ஏக்கர் நிலத்தை கொண்டது. கடந்த 60 வருடங்களுக்கு மேலாக மிகவும் சிறந்த பொழுதுபோக்கு இடமாக விளங்கி வருகின்றது.

இங்கு நீங்கள் கடல் கன்னிகளை நிச்சயம் காணலாம். இங்கு உள்ள தூய்மையானதும், குளிர்மையானதும் ஆன தடாகத்தில் கடல் கன்னிகள் தோன்றுகின்றார்கள்.


ஆம். அழகான மனிதப் பெண்கள் கடல் கன்னிகள் போல் ஆடைகள் உடுத்திக் கொள்கின்றனர். தடாகத்துக்குள் நீச்சல் அடிக்கின்றனர். இதை இவர் ஒரு தொழிலாக செய்து வருகின்றனர்.
இத்தொழில் மிகவும் இலேசானது அல்ல. மிகவும் நிபுணத்துவம் நிறைந்தது. கடுமையானது. மிகவும் சிறந்த நீச்சல்காரர்களால்கூட கடல் கன்னிகளாக இயங்க முடியாது. கிட்டத்தட்ட முழு நாள் முழுவதும் நீருக்குள்ளேயே கிடக்க வேண்டும். 70 பாகையை விட குறைவான வெப்பநிலை உடைய நீர் அது.

ஏனெனில் சாதாரணமாக பெரியவர்களால் 85 பாகை முதல் 89 பாகை வரை உடைய நீருக்குள்ளேயே இருக்க முடிகின்றது. ஒரு நாளில் மூன்று தடவைகள் கடல் கன்னிகளாக செயல்பட வேண்டியுள்ளது.

மேலும் ஒவ்வொரு தடவையும் 30 முதல் 40 நிமிடங்கள் வரை நீருக்குள்ளேயே செலவு செய்ய வேண்டும். இவற்றுக்கு 15 பவுண்டு எடை உடைய வாலை கடல் கன்னிகள் அணிய வேண்டி இருக்கின்றது. கால்கள் ஒன்றாக்கப்பட்டு இவ்வாலுக்குள் புகுத்தப்பட்டு விடும்.

உண்மையிலேயே அழகிய கடல் கன்னிகளாக இம்மனிதப் பெண்கள் கண்களுக்கு தோன்றுவார்கள். ஆனால் ஒன்றாக்கப்பட்டு பிணைக்கப்பட்ட கால்களுடன் நீந்துகின்றமை மிகவும் கடினமான விடயம் தான். எவ்வளவு தான் கடினமான காரியமாகவும் சிரித்த முகத்துடன் மிக நேர்த்தியாக கடமையை செய்கின்றார்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top