புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சவூதி அரேபியாவில், ஹெரோயின் போதைப் பொருளை கடத்திய குற்றத்திற்காக பாகிஸ்தான் பிரஜையொருவரின் தலை இன்று செவ்வாய்க்கிழமை துண்டிக்கப்பட்டுள்ளது.இந்நபர் சவூதி அரேபியாவுக்கு பெருந்தொகை போதைப்பொருளை கடத்தி வந்த வழக்கில்
குற்றவாளியாக காணப்பட்டவர் எனவும் புனித நகரான மக்காவில் வைத்த இவர் சிரச்சேதம் செய்யப்பட்டதாகவும் சவூதி அரேபிய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை கடந்த 4 மாதங்களில் சுமார் 460 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக 681 பேர் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டதாகவும் சவூதி உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவில் கொலை, பாலியல் வல்லுறவு, சமய எதிர்ப்பு, ஆயுதமுனைக் கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

இவ்வருடம் இதுவரை 16 பேருக்கு சிரச்சேதம் செய்யப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top