புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

அழகான கன்னத்தில், நெற்றியில் முத்து முத்தாய் பரு தோன்றினால் தன்னை அறியாமல் கை கிள்ளிப்பார்க்கும். இதனால் பருக்கள் அதிகமாகி ஆங்காங்கே வடுக்களாய் மாறும். முகப்பரு தோன்றுவதற்கு மன அழுத்தமும் ஒரு காரணம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். கோடைகாலத்தில் வியர்வையும், அழுக்கும் சேர்வதால் முகத்தில் கரும்புள்ளிகளும், முகப்பருவும் தோன்றும். முகத்தில் எண்ணெய் வடிந்தாலோ, ஆரோக்கிய குறைபாடினாலும் முகப்பரு வரும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். முகப்பரு வராமல் தடுக்க அவர்கள் கூறும் இயற்கையான வழிமுறைகளை பின்பற்றிப் பாருங்களேன்.

மனதை லேசாக்குங்கள்
மன அழுத்தம் இருந்தால் அது முகத்தில் பருக்களாக வெளிப்படும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். எனவே எதைப்பற்றியும் கவலைப் படவேண்டாம். யோகா, தியானம் செய்து மனதை லேசாக்குங்கள் முகம் பளிச் என்று ஆகும்.

நல்ல உறக்கம்
தினசரி எட்டுமணி நேரம் உறங்குவது சருமத்தை புதுப்பிக்க உதவும். இதனால் சருமம் ஆரோக்கியமாகும். எனவே நன்றாக ஓய்வெடுங்கள் முகப்பரு வராது. 

தண்ணீர் குடியுங்கள்
சருமத்தில் அழுக்குகள் இருந்தால் அவை முகப்பரு ஏற்பட காரணமாகிறது. தினசரி 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் அருந்துவது உடலின் நீர் சத்தினை தக்க வைக்கிறது. தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. இதனால் சருமத்தில் அலர்ஜி, முகப்பரு எதுவும் ஏற்படாமல் தடுக்கிறது.

நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள். பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதால் பருக்கள், சருமநோய்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

ஜங் ஃபுட் வேண்டாமே
வறுத்த, பொரித்த உணவுகளை தவிர்த்து விடுங்கள். அதேபோல் ஜங் ஃபுட் சாப்பிடாதீர்கள். சிப்ஸ், வறுத்த சிக்கன் போன்றவை எண்ணெய் பசையை அதிகமாக்கும் பருக்களை ஏற்படுத்தும் இவற்றை தவிர்த்தாலே முகப்பரு ஏற்படாது.

எலுமிச்சை சாறு
முகப்பரு தோன்றியுள்ள இடத்தில் சிறிதளவு எலுமிச்சை சாறு பூசுங்கள். இது முகப்பருவை மறையச் செய்யும். இரவு நேரத்தில் உறங்கும் முன் சிறிதளவு டூத்பேஸ்ட்டை பூசுங்கள் அது உலர்ந்து முகப்பருவை உதிர வைக்கும்.

வெள்ளைப் பூண்டு, புதினா
வெள்ளைப்பூண்டு எடுத்து தோலினை உரித்து முகப்பரு உள்ள இடத்தில் தேய்க்கவும். வடு கூட மறைந்து போகும். அதே போல் புதினாவை அரைத்து சாறெடுத்து அதை முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் அரிப்பு குணமடையும்.

முட்டையின் வெள்ளைக்கரு எடுத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசலாம் முகப்பரு குணமாகும். தேன் சிறந்த மருந்தாக செயல்படுகிறது. முகப்பரு தோன்றிய இடத்தில் தினசரி இரண்டு முறை சிறிதளவு தேன் பூசி வர முகப்பரு வராது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top