புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

வானூர் அருகே 5 வயது சிறுமியை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் செங்கமேடு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி அரிதாஸ் ( 31). அவரது 5 வயது மகள் நந்தினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

நேற்று முன்தினம் வீட்டின் எதிரே மற்ற சிறுவர், சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த நந்தினி வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோரும், உறவினர்களும் சிறுமியை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தொடர்ந்து அரிதாஸ் தனது மகளைக் காணவில்லை என்று வானூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுமியைத் தேடி வந்தனர்.

இந்நிலையில் தனது வீட்டுக்கு அருகே உள்ள கரும்புத் தோட்டத்தில் நந்தினியின் பிணம் கிடக்கிறது என்று அரிதாஸுக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் தோட்டத்துக்கு சென்று பார்த்தபோது தான் ஆசையாக வளர்த்த மகள் பிணமாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த வானூர் போலீசார் கொலையாளியை வலை வீசித் தேடினர். அப்போது அதே பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் ஜெயப்பிரகாஷ் மீது போலீசாரின் சந்தேகப் பார்வை விழுந்தது. இதையடுத்து அவர்கள் ஜெயப்பிரகாஷை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் சிறுமியை சீரழித்துக் கொன்றதை அவர் ஒப்புக் கொண்டார்.

இது குறித்து அவர் கொடுத்த வாக்குமூலம் வருமாறு,

சம்பவத்தன்று நந்தினி வீட்டின் எதிரே அதே பகுதியில் உள்ள சிறுவர், சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டு இருந்தாள். அப்போது அவள் வாயில் விசில் வைத்து கொண்டு ஊதிக்கொண்டு இருந்தாள். இதை பார்த்த நான் எனக்கு அந்த விசிலை கொடு என்று பலமுறை கேட்டேன். ஆனால் அவள் தர மறுத்துவிட்டாள்.

இதனால் கோபம் அடைந்த நான், அந்த விசிலை பறித்துக் கொண்டு அருகே உள்ள கரும்பு தோட்டத்துக்குள் ஓடினேன். அவள் என்னை விடாமல் துரத்தி கொண்டே ஓடி வந்தாள்.

இதனால் ஆத்திரம் அடைந்த நான் திடீரென்று நந்தினியை கட்டிப்பிடித்து அவளது வாயை பொத்தினேன். பின்னர் அவளை பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொலை செய்தேன். அதன் பிறகு அங்கு இருந்து நான் தப்பி ஓடிவிட்டேன்.

இதற்கிடையே நந்தினியுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர், சிறுமிகள் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் என்னை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் நான் நந்தினியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஜெயப்பிரகாஷை கைது செய்து நீதிமன்ற உத்தரவின்படி செஞ்சி சிறையில் அடைத்தனர். ஜெயப்பிரகாஷ் ஏற்கனவே அப்பகுதி சிறுமிகளிடம் சில்மிஷம் செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top