புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இத்தாலிக்குள் புகுந்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த 19 வயது அகதி ஒருவன் காரின் பொனட்டுக்குள், ஒரு போர்வை, தலையணை, தண்ணீர் பாட்டிலோடு மறைந்து இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.இத்தாலிக்குள் புகுந்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த 19 வயது அகதி ஒருவன்
காரின் பொனட்டுக்குள், ஒரு போர்வை, தலையணை, தண்ணீர் பாட்டிலோடு மறைந்து இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அரை மயக்க நிலையிலிருந்த அவனை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காரின் அடிப்புறத்தில் இவன் 20 மணிநேரம் மறைந்திருந்தது அனைவரையும் வியப்பிர் ஆழ்த்தியது.

பாரி(Bari) என்ற ஊரில் ஒரு காரை சந்தேகத்தின் அடிப்படையில் புலம்பெய்வுத் துறை அதிகாரிகள் பிடித்தனர். அதற்குள் ஓட்டுநர் கலாயானோவ் இவாய்ரோவும்(20 Kaloyanov Ivaylo), ஜியார்ஜுவா ஸ்டானிஸ்லாவாவும்(39 passenger Georgieva Stanislava) இருந்தனர். பல்கேரியா நாட்டைச் சேர்ந்த இருவரும் கிரீஸிலிருந்து வந்து கொண்டிருந்த போது அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்தக் காரில் வந்தவர்கள் சட்டத்திற்குப் புறம்பாக ஆட்களை புலம் பெயர்ந்து வர உதவி செய்து வந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டது. இதற்கு முன்பு பத்ராஸிலிருந்து ஒரு படகு மூலமாக இத்தாலிக்குள் 5000 யூரோ கட்டணத்திற்கு ஆட்களை கொண்டு வந்து விட்டுள்ளான்.

காரில் மறைந்து வந்த ஆப்கானிஸ் தான் அகதி காபூலைச் சேர்ந்தவன். அங்கு எட்டாண்டுகளாகத் தான் சேமித்து வைத்த பணத்தைக் கொண்டு ஐரோப்பாவுக்குள் வர முயன்றான். இவனை ஒட்டுநரும் உடன் வந்த பெண்ணும் பொனட்டுக்கு அடியில் மறைந்து கொள்ளுமாறு கூறி அழைத்து வந்துள்ளனர்.

இப்பெண்னை காரை சோதித்து அதிகாரிகள் கைது செய்தனர். இவளது கணவனை பிரிண்டிசி(Brindisi) துறைமுகத்துக்கு அருகே வைத்து கைது செய்தனர். இவர்கள் இருவரும் பெரிய குற்றவாளிக் கும்பலைச் சேர்ந்தவர்கள்.





கடந்த சில வருடங்களாக பெரிய “ட்ரக்” குகளுக்கு அடியிலும், லாரி, பஸ் போன்றவற்றின் அடியில் காணப்படும் சேஸிஸில்(chassis) தொற்றிக்கொண்டும், காருக்கு அடியில் மறைந்துகொண்டும் அகதிகள் இத்தாலிக்குள் புகுந்து விடுகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top