புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கொழும்பு விகாரமகாதேவி பூங்கா பகுதியில் தூண் ஒன்றின் மீது ஏறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டை ஒப்புக் கொண்ட நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 5 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட 6 மாதகால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


மகேஸ் அசங்க டி சொய்சா என்ற நபருக்கே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2010 டிசம்பர் 14ம் திகதி விகாரமகாதேவி பூங்கா பகுதியில் தூண் ஒன்றில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக குறித்த நபர் மீது பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

அந்த குற்றத்தை குறித்த நபர் ஒப்புக் கொண்டுள்ளதால் கொழும்பு பிரதம நீதவான் ரஸ்மி சிங்கப்புலி சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

தனக்கு நேர்ந்துள்ள அநீதி குறித்து ஜனாதிபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் எவரையாவது சந்திக்க வாய்ப்பு அளிக்காவிட்டால் கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக குறித்த நபர் அச்சுறுத்தல் விடுத்திருந்ததாக பொலிஸார் நீதிமன்றில் கூறியுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top