புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பிரசவத்திற்குப் பின்னர் பெண்கள் அதிகம் கவலைப்படுவது வயிற்றிலும், தொடைப்பகுதிகளும் ஏற்படும் தழும்புகளுக்குத்தான். வரி வரியாய் ஏற்பட்ட தழும்புகளை எப்படி போக்குவது என்றுதான் பலரும் ஆலோசித்துக் கொண்டிருப்பர். கர்ப்ப காலத்தில் வயிற்று தசைகளும், மார்பகங்களும் விரிவடைகின்றன. அதனால் அந்தப்பகுதியில் அரிக்கிறது. சொறிவதால் அந்த இடத்தில் தசை காய்ந்து விடுகிறது.

அதுதான் பிரசவத்துக்குப்பிறகு தழும்பாகிறது. இதைதான் ஸ்டிரெச் மார்க் என்பார்கள். குழந்தை பிறந்த பின்னர் எல்லா பெண்களுக்கும் ஏற்படக் கூடிய மிகப் பெரிய பிரச்சனை இந்த தழும்புகள் தான்! இந்த தழும்புகளை முற்றிலும் வராமல் தடுக்க முடியாது. ஆனால் கண்டிப்பாக அதை குறைக்க முடியும். கர்ப்ப காலத்தில் உடலில் முதுகு, கால்வலி, வயிறுவிரிதல் போன்ற போன்ற பிரச்சினைகளும் ஏற்படும்.

கர்ப்பமாக இருக்கும் பொழுது, அதாவது 7வது மாதத்தில் இருந்து ஆலிவ் ஆயிலை அடி வயிறு, கால், தொடைகளில் தேய்க்க வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரால் குளிக்க வேண்டும். இதோடு குழந்தை பிறந்த பின்பும் இவ்வாறு தொடர்ந்து முன்று மாதம் செய்ய வேண்டும்.

தினமும் அடிவயிறை குறைக்க கூடிய உடல் பயிற்சியினை தவறாமல் செய்யவும். இடுப்புக்கு பெல்ட் கட்டாயம் போடவும். இதன் முலம் படிப்படியாக வயிற்று பகுதி சுருங்கி பழைய தோற்றம் கிடைக்கும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top