
வந்துள்ளார். இவ்வாறு நூல் விற்பனை செய்த பணத்தை பெற கணவன், மனைவி இருவரும் குழந்தையுடன் நேற்று மாலை 4 மணியளவில் கிருஷ்ணன்புதூர் பகுதிக்கு சென்றனர்.
அம்மாபேட்டை மிலிட்டரி ரோடு பகுதியில் சென்ற போது, விருத்தாச்சலம்,சேலம் பயணிகள் ரயில் வருவதற்காக ரயில்வே கேட்டை கேட் கீப்பர் ஏழுமலை பூட்டினார். இருபுறமும் வாகனங்கள் நின்றன. அமீர் தனது மனைவி, மகனுடன் ஓரமாக நின்றிருந்தார். கேட் பகுதியை ரயில் கடக்கும் போது சிறுவன் ஆசாத், திடீரென தண்டவாளப்பகுதிக்கு ஓடினான். இதனை பார்த்த அமீர் பின்னால் ஓடிச் சென்று அவனை மீட்க முற்பட்டார். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் 2 பேரும் ரயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டனர். சிறுவன் ஆசாத் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு 2 துண்டாகி பலியானான். அமீர் சாக்கடை கால்வாயில் வீசப்பட்டு இறந்தார்.
0 கருத்து:
கருத்துரையிடுக