புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இத்தாலியில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரு கிராமத்தினர் திருமணம் செய்து கொள்ளவே தயக்கம் காட்டி வருகின்றனர்.ஐரோப்பிய நாடுகளில் கடும் நிதி நெருக்கடி காணப்படுகிறது. கிரீஸ், ஸ்பெயின்
உள்ளிட்ட நாடுகளில் வங்கிகளில் பணம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க இயலாத நிலையில் சில நாடுகள் தத்தளிக்கின்றன. இத்தாலியில் வேலை வாய்ப்பின்மை முன்பு எப்போதும் இல்லாத அளவில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இத்தாலி நாட்டின் வடக்குப் பகுதியில் வோலானியா பரிஷ் என்ற கிராமத்தில், 300 குடும்பங்கள் உள்ளன. ஆண்டுக்கு ஓரிரு திருமணங்கள் இந்தக் கிராமத்தில் நடக்கும்.

அதிகபட்சமாக 1960ஆம் ஆண்டு இந்தக் கிராமத்தில் 17 திருமணங்கள் நடந்தன. தற்போது இந்தக் கிராமத்தில் ஒரு திருமணம் கூட நடக்கவில்லை.

இதுகுறித்து இங்குள்ள பாதிரியார் ஜியான்கார்லோ பிரினி குறிப்பிடுகையில், இந்தக் கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்குத் திருமணம் செய்து கொள்ளும் ஆசை உள்ளது. வேலை வாய்ப்பின்மை, திருமணச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, யாரும் திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளனர்.

எனவே என்னுடைய பங்களிப்பாக ஒவ்வொரு திருமணத்துக்கும் 500 யூரோ அளிக்க உள்ளேன் என்றார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top