புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சேலம் சின்ன திருப்பதி காந்தி நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 45). ரியல் எஸ்டேட் புரோக்கர் தொழில் செய்து வந்தார். இவருக்கு லட்சுமி (வயது 38) என்ற மனைவியும், அருண்(வயது 21), சந்தியா (வயது 14), கார்த்திக் (வயது 12), ஜான்சிராணி (வயது 10) ஆகிய குழந்தைகளும் உள்ளனர்.


இவர்களில் அருண் ஓமலூரில் லாரி பட்டறை ஒன்றில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். சந்தியா 9-ம் வகுப்பும், கார்த்திகா 7-ம் வகுப்பும், ஜான்சிராணி 4-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். முருகனுக்கு குடிப்பழக்கம் உண்டு. தினமும் குடித்து விட்டு வந்து லட்சுமியிடமும், குழந்தைகளிடமும் தகராறு செய்வார்.

இவரை அக்கம் பக்கம் இருப்பவர்கள் சமாதானம் செய்து வைப்பார்கள். வழக்கம் போல் முருகன் நேற்று இரவு 9.30 மணி அளவில் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர். வீட்டுக்குள் வந்த முருகன் , மனைவி லட்சுமியிடம் தகராறு செய்தார்.

இதனால் கோபம் அடைந்த லட்சுமி, முருகனை திட்டி விட்டு கதவை தாழிட்டு தூங்க சென்றார். அப்போது முருகன் தள்ளாடி தள்ளாடி சென்று அவரது மகளிடம் தவறாக நடக்க முயற்சித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மகள் அலறித்துடித்தார்.

இதை கேட்ட லட்சுமி அங்கு ஓடிவந்து முருகனிடம் இருந்து மகளை காப்பாற்றினார். பிறகு அவர் முருகனை திட்டினார். அப்போது முருகன் லட்சுமியை சரமாரியாக தாக்கினார். இதில் கோபம் அடைந்த லட்சுமி, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து முருகனின் கழுத்தில் வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த முருகன் சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்து விட்டார்.

பிறகு லட்சுமி அரிவாளை எடுத்து கொண்டு ரோட்டிற்கு வந்து எனது மகளை சீரழித்தவரை கொன்று விட்டேன் என கண்ணீரும் கம்பலையுமாக கூறினார். இதை அறிந்த அக்கம் பக்கம் இருந்தவர்கள் முருகன் வீட்டிற்கு வந்து முருகனின் பிணத்தை பார்த்தனர். பிறகு அவர்கள் இதுபற்றி கன்னங்குறிச்சி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே உதவி கமிஷனர் தங்கத்துரை, இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து முருகனின் உடலை கைப்பற்றினர். அவரை கொல்ல பயன்படுத்திய அரிவாளையும் கைப்பற்றினர். பின்னர் லட்சுமியை கைது செய்தனர்.

சேலம் போலீஸ் கமிஷனர் கே.சி.மஹாலி உத்தரவின் பேரில் மகளிர் போலீசார் லட்சுமியை சேலம் அம்மாப்பேட்டை மகளிர் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகிறார்கள். போலீசாரிடம் லட்சுமி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதில் அவர் கூறி இருப்பதாவது:-

நான் கோவை பாப்பநாய்க்கன் பாளையத்தை சேர்ந்தவள். ஏழை குடும்பத்தை சேர்ந்த நான் கூலி வேலைக்கு சென்று வந்தேன். அப்போது முருகன் கோவைக்கு வந்து கூலி வேலை செய்து வந்தார். எங்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. பின்னர் நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டு சேலம் சின்னத்திருப்பதிக்கு வந்து வசித்து வந்தோம்.

எனது கணவருக்கு குடிப்பழக்கம் உண்டு. தினமும் குடித்துவிட்டு வந்து அடித்து உதைப்பார். கடந்த சில நாட்களாக முருகன் எனது மகளிடம் தவறாக நடக்க முயன்றார். இதை தட்டி கேட்டும் அவர் திருந்தவில்லை. நேற்றும் அவர் மது குடித்து வீட்டிற்கு வந்து மகளிடம் தவறாக நடக்க முயற்சித்தார். இதைஅறிந்த நான் அவரை கொன்று விட்டேன்.

இவ்வாறு அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளதாக தெரிகிறது.

இந்த கொலை சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top