புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நெல்லை மாவட்டத்தில் கூத்தங்குழி வழியாக ராதா புரத்துக்கு நேற்று ஒரு பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சில் கூத்தங்குழி பஸ்நிறுத்தத்தில் இருந்து இளம்பெண் ஒருவர் ஏறினார். அவர் ராதாபுரத்திற்கு டிக்கெட் எடுத்தார்.


பஸ் கூடங்குளம் அருகே வந்தபோது அந்த பெண் வாயில் நுரைதள்ளிய நிலையில் திடீரென மயங்கி விழுந்தார். இதனை அந்த பஸ்சில் பயணம் செய்த மற்றபயணிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக பஸ் நிறுத்தப் பட்டது.

கூடங்குளத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அந்த பெண் சேர்க்கப்பட்டார். அந்த பெண்ணுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து கூடங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நினைவு திரும்பியதும் அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் அந்தபெண் கொசுமருந்தை குடித்து தற்கொலை முயற்சி செய்தது தெரியவந்தது. மேலும் தற்கொலைக்கு முயன்ற தற்கான காரணத்தையும் கூறினார். அதுபற்றிபோலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தற்கொலைக்கு முயன்ற அந்த பெண்ணின் பெயர் அனிதா(வயது25). சென்னை ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி விட்டது. மணி என்ற கணவரும், அட்சயா(5) என்ற மகளும் உள்ளனர்.

அனிதாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி குடும்பதகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கணவரை விட்டு பிரிந்துசென்று, சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் மகளுடன் வாடகை வீட்டில் வசித்துவந்தார்.
பின்னர் மகளை தனது தாய்வீட்டில் விட்டுவிட்டு தனியாக வசித்து வந்தார்.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்பவருடன் அனிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சந்திரசேகருடனான உறவை அனிதா திடீரென துண்டித்துக் கொண்டார். அப்போதுதான், நெல்லை மாவட்டம் கூத்தங்குழியை சேர்ந்த மைக்கேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. விடுமுறையை கழிக்க சென்னையிலுள்ள உறவினர் வீட்டிற்கு வந்து சென்றபோது ஒருமுறை தற்செயலாக அனிதாவை சந்தித்தார்.

பின்பு அவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். இருவரும் சேர்ந்து ஒன்றாக ஊர் சுற்றியுள்ளனர். இந்த பழக்கம் அவர்களுக்குள்ளான நெருக்கத்தை மேலும் அதிகப்படுத்தியது.

மைக்கேல் கடலில் எண்ணெய் எடுக்கும் வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். சில வாரங்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக அனிதாவிடம் கூறி விட்டு மைக்கேல் ஊருக்கு வந்து விட்டார்.

அதன்பிறகு அவர் அனிதாவை பார்க்க சென்னைக்கு வரவில்லை. மைக்கேலிடம் போனிலும் பேசமுடியவில்லை. அவரது போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதர்ச்சியடைந்த அனிதா மைக்கேல் எங்கு இருக்கிறார்? என்று விசாரித்தார். அப்போது அவர் கூத்தங்குழியில் இருப்பது தெரியவந்தது. இதனால் அவரைபார்க்க கூத்தங்குழி கிராமத்துக்கு அனிதா நேற்று வந்தார். அங்கு மைக்கேலை சந்தித்து பேசிய அனிதா, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். ஆனால் திருமணம் செய்து கொள்ள மைக்கேல் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அனிதா மனவேதனை அடைந்தார். மீண்டும் சென்னை செல்ல அவருக்கு மனம் இல்லை. அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். கூத்தங்குளி பஸ்நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அவர், அங்குள்ள கடையிலிருந்து கொசுமருந்து லிக்கியூடேட்டரை வாங்கி குடித்துவிட்டு அந்த வழியாக வந்த ராதாபுரம் பஸ்சில் ஏறிச்சென்றார். அப்போதுதான் அவர் மயங்கி விழுந்துள்ளார்.

கூடங்குளத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அனிதா, மேல்சிகிச்சைக்காக நாகர் கோவிலில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அனிதா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கள்ளக்காதலன் திருமணத்திற்கு சம்மதிக்காததால் பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கூடங்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கட்டின கணவனும் கசந்துவிட்டது!! கையைப் பிடித்த கள்ளக் காதலனையும் கையை கழுவிவிட்டாள்...கடைசியில் கண்டவனும் கைவிட்டான். கைகாரிக்கு காவல்துறையில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு காணமுடியுமா?

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top