
இவர் வயிற்றில் ஏழு மாதக்குழந்தையும் இவருடன் சேர்ந்து எரிந்து மரணமாகியுள்ளது.
கடந்த 24ம் திகதி வீட்டில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகறாறின் போது இருவரும் தீ மூட்டி எரிந்துள்ளனர்.
இதன் பின்னர் இருவரும் சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி மனைவி மரணமாகியுள்ளார்.
இவரது சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கணவன் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்றுவருகின்றார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக