புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தந்தை-மகள் உறவு…! புனிதமானது இந்த உறவு. படிக்க வைத்து, சீர்வரிசை கொடுத்து திருமணம் செய்து வைத்து மகளை அழகுபார்க்க வேண்டிய தந்தைகள் சிலர் தமிழகத்தில் தற்போது குடிபோதையில் திசை மாறி செல்லும் அவலநிலைக்கு சென்று விட்டனர். தந்தையை
அவரிடம் செல்லாதே… என்று கூறும் அளவுக்கு அறுவறுக்கத்தக்க வகையில் அசிங்கமாக நடந்து கொள்கிறார்கள்.

தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இளம்பெண் ஒருவர் தன் தந்தையின் கொடூர கொலைகள் குறித்து போட்டு உடைத்தார். இதையடுத்து போலீசார் விசாரிக்கையில் பல பெண்களை ருசிபார்த்த அந்த நபர் பெற்ற மகளையும் ருசிபார்க்க போராடியதும் வெளியே தெரிய வந்தது. மகளுடன் ஆசையாக பேசி, அன்பாக பழகி வேண்டிய தந்தையர்கள் இதுபோல் செயல்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதே போல் சேலத்திலும் குடிபோதையில் தனது மூத்த மகளிடம் தவறாக நடக்க முயன்ற கணவனை வெட்டி கொன்றார் பெண். அவர் கூறும்போது காதலித்து திருமணம் செய்து கொண்டோம். ஆனாலும் என் மகளை தனியாக அழைத்து சென்று செக்ஸ் சித்ரவதை செய்ய முயன்றதாகவும், பல முறை கண்டித்தும் திருந்தாததால் அவரை கொலை செய்தேன் என்றும் ஆவேசமாக பேசித் தீர்த்தார் தாய்.

மற்றவர்களிடம் இருந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டிய தந்தை என்ற உறவே தற்போது இதுபோல் திசைமாறி வேலியே பயிரை மேய்வது போல் சென்று கொண்டு இருக்கிறார்கள். தற்போது இந்த சம்பவங்கள் தமிழகத்தில் அடிக்கடி அரங்கேறி வருகிறது. இது ஒரு விதமான நோயாகவே மாறிவிட்டது என்று சொல்லும் அளவுக்கு குடிபோதையில் காமவெறி ஏற்பட்டு யார் என்றே தெரியாத, சிந்திக்க முடியாத அளவுக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

மேலும் அவ்வப்போது சிறுமிகள், பள்ளி குழந்தைகளும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். வளர்கின்ற சந்ததியினர் மீது ஏவப்படும் இந்த கொடூர செயல்களால் அந்த குழந்தைகளின் எதிர்காலம் மட்டுமின்றி அவர்கள் மனரீதியாகவும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி விட்டது.

பொதுவாக சில வீடுகளில் பெண் குழந்தைகள் தாய் கட்டுப்பாட்டில் இருப்பார்கள். அதுபோன்ற குழந்தைகளுக்கு எதிராகத்தான் தந்தைகள் சிலர் வெறிபிடித்து அலைகிறார்கள்.

இதுபோன்ற மனநிலை தமிழகத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது என்றே சொல்லும் அளவுக்கு தினமும், மகள்களுக்கு எதிராகவே தந்தை செயல்படும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. குடிபோதையில் தான் இப்படி செய்கிறார்களா? அல்லது சல்லாபத்தில் இப்படி நடந்து கொள்கிறார்களா? என்று புரியாத புதிராகவே உள்ளது.

குடிபோதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே இதுபோல் அத்துமீறும் நபர்களுக்கு கவுன்சிலிங் மற்றும் மனநல மருத்துவர் மூலம் சிகிச்சை மேற்கொண்டால் அவர்கள் திருந்த வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் பொதுவாகவே இப்படி இருக்கிறவர்கள், இதுபோன்ற மருத்துவர்களை சந்திக்க மறுப்பதும் குற்றத்துக்கு துணை போவது போல் இருக்கிறது.

எனவே இதுபோன்ற தந்தைகளிடம் பாதிக்கப்படும் குழந்தைகளை காப்பாற்ற தாய் போராடிவரும் நிலை பல இடங்களில் இன்னமும் திரைமறைவில் நடந்துதான் வருகிறது. காலம்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்?

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top