
மொடல் அழகிகள் வானிலை அறிக்கை படித்தனர்.
இந்த நிகழ்ச்சி குறித்து பார்வையாளர்களிடம் உடனடியாக ஓன்லைனில் கருத்து கேட்டது தொலைக்காட்சி நிறுவனம். மொடல் அழகிகளை பார்த்த பார்வையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ஷாங்காய் டெய்லி பத்திரிகை கூறுகையில், யூரோ கால்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன. இது முடிந்தவுடன் சீனாவில் நீச்சல் உடை போட்டி நடக்க உள்ளது. அதை விளம்பரப்படுத்தும் நோக்கில், போட்டியில் பங்கேற்கும் 2 அழகிகள் தொலைக்காட்சியில் வானிலை அறிக்கை படிக்கும் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
யூரோ கால்பந்து போட்டிகளை பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள், நீச்சல் உடையில் 2 இளம்பெண்கள் திடீரென தோன்றி வானிலை அறிக்கை படிப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
யூரோ கால்பந்து போட்டிகள் நடக்கும் மைதான பகுதியில் உள்ள வானிலை குறித்து கடந்த சனிக்கிழமை முதல் இரவு 11.15 மணிக்கு ஒரு நிமிடம் ஒளிபரப்பாகிறது.
பார்வையாளர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து, இந்த அழகிகளுக்கு பதில் வழக்கம் போல் முழு உடை அணிந்த பெண்கள் இப்போது வானிலை அறிக்கை படிக்கின்றனர். எனினும் மொடல் அழகிகள் வானிலை அறிக்கை படிப்பதற்கு பலர் ஆதரவும் தெரிவித்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக