புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தனது Facebook பக்கத்தில் கடவுள் இல்லையென்று எழுதியமைக்காக 30 மாதச் சிறைத்தண்டனை பெற்றுள்ளார் இந்தோனேசிய நபர் ஒருவர்.
தூதுவர் மொகமது பற்றி ஒன்லைனில் சர்ச்சைக்குரிய விடயங்களைப் பகிர்ந்துகொண்டமைக்காக இந்நபர்
கைதுசெய்யப்படடார்.

Facebookஇல் ஒரு நாத்திகக் குழுவை உருவாக்கிய இந்நபர் அதில் நகைச்சுவையான கருத்துக்களையும் தூதுவர் தனது பணியாளர்களுடன் பாலியல் தொடர்புகளை வைத்திருந்தார் என்றும் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

மதரீதியான வெறுப்பினையும் பகைமையையும் பரப்பினாரென இவர் குற்றஞ்சாட்டப்பட்டார். இவ்வழக்கு மேற்கு சுமாத்ராவில் Muaro Sijunjung மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

அந்நபரால் கூறப்பட்ட இன்னொரு கருத்தில் முகமது தனது மருமகள் ஒருவருடனும் தொடர்பு வைத்திருந்தார் என்பதும் இருந்தது.

இதனால் இவர் செய்தது சமூகத்திற்கு இழிவையேற்படுத்தும் செயலென்றும் இஸ்லாமைத் தூற்றிய செயலென்றும் நீதிமன்றத்தால் தீர்ப்புக் கூறப்பட்டு மூன்றரை வருடச் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டார்.

இவர் ஆத்திரமடைந்த ஒரு கும்பலாலேயே அடிக்கப்பட்டுப் பின்னர் காவற்றுறையினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

எனினும் இவருடன் தொடர்புடையவர்களும் சர்வதேசச் செயற்பாட்டாளர்களும் தமது ஆதரவை இவருக்குத் தெரிவித்துத் தண்டனையை இல்லாது செய்யும்படி மனுக்களை அனுப்பியுள்ளனர்.

உலகின் மிகப்பெரிய முஸ்லிம் பெரும்பான்மை நாடாக இந்தோனேசியா உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top