புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தனது கணவரின் முதல் மனைவிக்குப் பிறந்த மகனுடன், சேர்ந்து குடும்பம் நடத்திய பெண்ணை ஊரே கூடி வெளியேற்றியது. உலகில் எந்த மூலையில் போய் வேண்டுமானாலும் நான் குடும்பம் நடத்துவேனே தவிர எனது கள்ளக்காதலை விடவே மாட்டேன் என்று அந்தப் பெண்ணும் தைரியமாக கூறி விட்டு கிளம்பிப் போனார்.


பீகார் மாநிலம் பதுவாலி கிராமத்தில்தான் இந்தக் கூத்து நடந்துள்ளது. பதுவாலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜவஹர் பாஸ்வான். இவருக்கு 52 வயதாகிறது. முதல் மனைவி இறந்து விட்டார். அவர் மூலம் விகாஸ் பாஸ்வான் என்ற 22 வயது மகன் உள்ளார்.

இந்த நிலையில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பூனம் தேவி என்ற பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டார். அவருக்கு தற்போது 22 வயதாகிறது. பூனம் தேவிக்கும், ஜவஹர் பாஸ்வானுக்கும் 2 குழந்தைகள் பிறந்தன.

இந்த நிலையில், பூனத்திற்கும், ஜவஹர் பாஸ்வானின் முதல் மனைவிக்குப் பிறந்த மக‌னுமான விகாஸுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. உறவு முறை மாறிப் போய் இருவரும் தீவிரமாக காதலித்துள்ளனர். ஒரே வீட்டுக்குள் குடும்பமே நடத்தத் தொடங்கினர். இதைப் பார்த்து கொதிப்படைந்து விட்டார் ஜவஹர்.

உடனே ஊர்ப் பஞ்சாயத்தைக் கூட்டினார். தனது 2வது மனைவி முறை கெட்டு நடக்கிறார். தனது மகனைப் போல கருத வேண்டிய எனது மகனுடன் உறவு வைத்துள்ளார். இதை என்னால் ஏற்க முடியாது. இருவரையும் நான் வீட்டை விட்டு துரத்தி விட்டேன். அவர்களை என்னால் வீட்டில் சேர்க்க முடியாது, ஊரிலும் யாரும் இவர்களை சேர்க்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து பஞ்சாயத்தார் பூனத்திற்கு அறிவுரை கூற முயன்றனர்.ஆனால் அவரோ, செத்தாலும் சாவேனே தவிர விகாஸை விட்டுப் பிரிய மாட்டேன் என்றார். இதைக் கேட்டு அதிர்ந்து போன ஊர்ப் பஞ்சாயத்தார், ஒன்று நீங்கள் இருவரும் பிரிய வேண்டும் இல்லாவிட்டால் ஊரை விட்டுப் போக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

அதைக் கேட்ட பூனம், உலகின் எந்த மூலைக்குப் போய் வேண்டுமானாலும் என்னால் வாழ முடியும். அதைத் தான் செய்யப் போகிறேன், மாறாக விகாஸை விட்டுப் பிரியவே மாட்டேன் என்று கூறி விட்டு விகாஸையும், தனக்குப் பிறந்த 2 குழந்தைகளையும் கையோடு கூட்டிக் கொண்டு நடையைக் கட்டினார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top