புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சட்டையம்புதூர் பகுதியைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளி சிவக்குமாருக்கும் ( வயது 33), திருச்செங்கோட்டை அடுத்த தேவனாங்குறிச்சியைச் சேர்ந்த பிளஸ்-2 படித்த பெண் சண்முகவடிவுக்கும் இன்று காலை திருச்செங்கோடு கைலாசநாதர்
கோவிலில் திருமணம் நடப்பதாக இருந்தது.

தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் மயங்கி விழுந்து விட்டார். இதனால் மணப்பெண்ணை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் டாக்டர் பரிசோதித்து விட்டு மணப்பெண் நன்றாக உள்ளார் என்ற கூறினார்.

பின்னர் உறவினர்கள் திருமணத்தை நடத்த முயன்றபோது மணப்பெண் தற்போது திருமணம் வேண்டாம் என்று மறுத்து விட்டார். மீறி திருமணத்தை நடத்தினால் விஷத்தை குடித்து சாவேன் என்று மிரட்டினார். இதனால் திருமணத்தை நிறுத்தி விட்டனர்.

இதன் காரணமாக இரு வீட்டார் இடையே தகராறு ஏற்பட்டடது. இதுகுறித்து போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. திருச்செங்கோடு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் மணப்பெண் திருமணத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லை.

திருமணத்துக்காக செலவு செய்து இப்படி ஆகி விட்டதே என்று மணமகனின் உறவினர்கள் கதறினார்கள். செலவு செய்த தொகையை தருமாறு மணமகள் வீட்டாரிடம் மணமகன் வீட்டார் கேட்டனர். ஆனால் அவர்கள் பணம் தர மறுத்து விட்டனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேசி வருகிறார்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top