புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


உலகின் சோம்பேறிகள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்கள் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் தான் என்பது சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.ஹார்வார்ட் மருத்துவ கல்லூரி நடத்திய ஆய்வில், பிரிட்டன் நாட்டினர் 63 சதவிகிதமும், பிரான்ஸ் நாட்டினர் 33 சதவிகிதமும்,
அமெரிக்காவில் 41 சதவிகிதமும் எவ்வித வேலையையும் செய்யாமல் சோம்பேறிகளாக இருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 5.3 மில்லியன் பேர் உடல் இழைப்பு இல்லாததால் இறந்து போனதாகவும் தெரியவந்துள்ளது.

ஹார்வர்டு மருத்துவக் கல்லூரியின் மருத்துவர் இ மின் லீ என்பவர், பிரிட்டனின் மோசமான தட்ப வெப்பமும், விளையாட்டுக்கான உள்கட்டமைப்புக் குறைபாடுகளும் உடற்பயிற்சியில் ஆர்வமில்லாமல் மாற்றுகின்றது என்றார்.

ஆயினும் அவர்கள் தங்கள் வாழ்க்கை முறைகளை மாற்றியாக வேண்டும். ஒரு நாளைக்கு 15 முதல் 30 நிமிடங்கள் வரை நடைபயிற்சி, குழந்தைகளோடு விளையாடுதல், வீட்டு வேலைகள் போன்றவற்றில் ஈடுபடலாம்.

தினமும் உடற்பயிற்சிக் கூட்டத்துக்கு சென்று பயிற்சி செய்வதால் எடை குறையும், ஆரோக்கியம் கூடும் என்று தெரிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top