புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பணிப்புலம் சனசமூக நிலைய புனர் நிர்மானவேலை ஆரம்பித்த நாள் முதல் இன்றுவரையான நிகழ்வுகளின் விளக்கம்.புனர் நிர்மான வேலைகளுக்கான பல இடையூறுகளும் யாவரும் அறிந்ததே.இருந்தும் பணிப்புலத்தை நோக்கிய இந்த நிர்மான வேலையை தொடர
நமது ஊரில் வசிக்கும் அனைத்து சமூகத்தொண்டர்களை நாடியிருந்தோம்.


கடந்த பங்குனி மாதம் நான் எனது தனிப்பட்டவிடயமாக இலங்கை பயணமாகியபோது நிர்மான வேலைக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டன.வேலையும் ஆரம்பித்து தடைகள் பலதால் நிறுத்தப்பட்டன.கடந்த ஆனிமாதம் மீண்டும் எனது பயணத்தின்போது
வேலையை ஆரம்பித்து தற்போது தொடர்ந்தும் பணிகள் நடைபெறுகின்றது.
பணிஆரம்பத்த ஒரு வாரத்தில் ஆறு இலட்சம் ரூபா திரு இரவி அவர்களிடம் வளங்கியிருந்தோம்.இப்பணம் ஒரு  இலட்சம்  ரூபா டென்மார்க்கிலும், ஐந்து இலட்சம் ஜேர்மனியிலும் சேர்க்கப்பட்டவை.


இரண்டாவது பகுதி ஆறு இலட்சம் வங்கிமூலம் வளங்கப்பட்டது. சுவிஸ் வாழ் எம் உறவுகளின் பங்களிப்பில் வளங்கப்பட்டவையாகும்.லண்டனில் இருந்து 45,000 ரூபா சனசமூக நிலைய வங்கிக்கணக்கில் நிலுவையில் உள்ளன.
டென்மார்க்கில் இருந்து ஒருவருடங்களுக்கு முன் ஒரு  இலட்சத்தி பதினைந்தாயிரம் ரூபா வரைபடத்துக்காய் முத்தையா அன் பில்டேஸ் என்ற கொம்பனிக்கு வளங்கப்பட்டது. இது ஆரம்பத்தில் வரைபடம் 
வரைவதற்க்கு வளங்கப்பட்டது.ஜேர்மனியில் இருந்து உண்டியல்மூலம் ஐந்து  இலட்சம் டென்மார்க்கில் இருந்து இரண்டு இலட்சத்தி பதினைந்தாயிரம் ரூபா.
சுவிஸில் இருந்து ஐந்து  இலட்சம் .இங்கிலாந்து 45,000,00 ரூபா வங்கியில் உள்ளது.


எமது வாசிகசாலை நிர்மாண வேலைக்காய் முப்பது  இலட்சம்  இதில்
பன்னிரண்டு  இலட்சம்  வளங்கப்பட்டுள்ளது.இரண்டாவது வரைபடப்படி எதிர்கால கழிவறையை இப்பவே கட்டமுடிவாக்கி அதனுடன் ஒரு தண்ணீர் பம்ப் தண்ணீர் தாங்கி 500 லீட்டர் கொள்ளளவு.வாசிகசாலை முன்றலில் காறைபோடவேண்டும்,பாலர் பாடசாலை மாணவர்களுக்கான ஒரு மண் தொட்டி இவற்றுக்கான செலவு வேறாக வளங்கவேண்டும். நாங்கள் திட்டம் இட்டபோது இவைகள் சேர்க்கப்படவில்லை.


சனசமூகநிலையத்துக்கான தளபாடங்கள் தேவை இதற்க்காக ஒருவரை நாடி தளபாடம் செய்யவும் ஒழுங்கமைக்கவேண்டும்.தற்போது கனடா,நெதலாண்ட.,சுவீடன்.நோர்வே, போன்ற நாடுகளில்
இருந்து என்னும் புனர்நிர்மான வேலைக்கான நிதிகள் ஊருக்கு போய்ச் சேரவில்லை.ஆகவே நிதிசேகரிப்பாளர்கள் வேகமாக செயற்ப்பட்டு நிதியை சேகரித்து துரிதவேளையல் அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
இன்றுவரை முடிந்தவேலைகளின் கணக்குப்படி 70% மானவேலைகள்
முடிந்துள்ளதை இணையங்களில் வெளிவந்த படங்களில் இருந்து அறிந்திருப்பீர்கள்.


நிதி வழங்குவதாய் கூறிய பலரின் கேள்விகளில் ஒன்று வேலையை தொடங்குங்கோ நிதி தருவதாய் கூறினார்கள்.வேலையும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. வெகு விரைவாக நிதியை வளங்கி நிர்மான வேலை நிறுத்தாமல் தொடர உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.கனடா வாழ் எம் உறவுகளுக்கு தயவானவேண்டுகோள் நீங்கள் பங்களிப்பு செய்வதாய் கூறியவர்களும், இதுவரை பங்களிப்பு செய்யாமல் உள்ளவர்களும் தங்களது நிதியை "ஆரபி நகை" மாடத்தில் வளங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


அனைத்து புலம் பெயர்வாழ்மக்களுக்கும் எமது உயிர் நாடியாம் சன சமூகநிலைய நிர்மாணவேலை முடிவு பெறும் நிலையில் உள்ளது.இது
எந்த தடையும் இல்லாமல் தொடர நிதிகள் சரியான நேரத்துக்கு செல்லவேண்டும் ஆகவே வெகு விரைவாக உங்கள் பங்களிப்பை செய்யுங்கள்.நிதி சேகரிப்பாளர்களும் உங்கள் பணியை துரிதப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

" நம்மைத்தேடி நேரம் வராது நாமே நமது சமூகப்பணிக்காய் நேரம் ஒதுக்கவேண்டும்".


























































தகவல் -
பண்கொம் .நெட்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top