புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வகுப்பில் தண்ணீர் சிந்தியதற்காக மாணவிகளின் சீருடையை கழற்றி துடைக்க சொன்னதாக பள்ளி தலைமை ஆசிரியை மீது பரபரப்பு புகார் கூறப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள பதா பவன் பள்ளி விடுதியில் படுக்கையில் சிறுநீர் கழித்த 5ம் வகுப்பு மாணவியை விடுதி வார்டன் சிறுநீர் குடிக்க
சொன்ன விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அந்த மாநிலத்தில் உள்ள பெண்கள் பள்ளி ஒன்றில் வகுப்பறையில் தண்ணீர் கொட்டியதற்காக மாணவிகள் சீருடைகளை கழற்றி, அதைக்கொண்டு தரையை துடைக்க வைத்ததாக தலைமையாசிரியை மீது புகார் எழுந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் ஹால்டியா நகரில் தனியார் பெண்கள் பள்ளி உள்ளது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியை சந்தியா ராணி ஜனா. நேற்று வகுப்பறைகளுக்கு ரவுண்ட்ஸ் வந்தார். அப்போது எட்டாம் வகுப்பில் தரையில் தண்ணீர் கொட்டி கிடந்தது. இதை பார்த்து கோபமடைந்த சந்தியா, தண்ணீரை கொட்டியது யார் என்று மாணவிகளிடம் கேட்டார். அப்போது 3 மாணவிகள் எழுந்து நின்றனர். அவர்களை பார்த்து ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியை, 3 பேரையும் வகுப்பறையை விட்டு வெளியே இழுத்து வந்து அடி வெளுத்து வாங்கினார். அதோடு நிறுத்தாமல் மாணவிகளின் சீருடையை கழற்றி, அதாலேயே தண்ணீரை துடைக்க சொன்னார். அழுதபடியே மாணவிகள் உடைகளை அவிழ்த்தனர். அப்போது அவமானத்தாலும், வலியாலும் துடித்த ஒரு மாணவி மயங்கி விழுந்தாள். இதனால் பயந்துபோன சந்தியா, அந்த மாணவியை வீட்டில் கொண்டு விடுமாறு மற்ற மாணவிகளிடம் கூறினார். மாணவியின் தோழிகள் அவளுக்கு சீருடையை அணிவித்து வீட்டில் கொண்டுவிட்டனர். மாணவிக்கு காய்ச்சல் அடித்தது. கைகள் வீங்கி போய் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் அவளிடம் விசாரித்தனர். அப்போது நடந்ததை கூறி கதறி அழுதாள் மாணவி. இதனால் கோபம் அடைந்த பெற்றோர், பள்ளிக்கு வந்து நிர்வாக கமிட்டியிடம் முறையிட்டனர். தலைமையாசிரியர் மீது எழுத்துபூர்வமாக புகார் கொடுத்தனர். அதில், ‘மற்ற மாணவிகள் முன்பு ஆடைகளை களைந்ததால் எனது மகள் அவமானத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறாள். பள்ளிக்கு வரவே அவளுக்கு விருப்பம் இல்லைÕ என கூறியிருந்தனர். பள்ளியின் நிர்வாக கமிட்டி செயலாளர் துஷார் கூறுகையில், ‘தலைமையாசிரியை மீது புகார் வந்துள்ளது. அவர் தப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து போலீசில் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை என்றார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top