புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பல ஆண்களை திருமணம் செய்த “கல்யாண ராணி” போலீஸ் அதிகாரிகளையும் தனது பலத்தால் வீழ்த்தியுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரளாவை சேர்ந்த பெண் சஹானாஸ். இவர் பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாகவும், அவர்களிடம் பணம் பறித்ததாகவும் போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்யப்பட்டது. அதில், திருவொற்றியூரை சேர்ந்த சரவணன், அடையாறு செல்போன் நிறுவன கடையில் வேலை செய்யும் மற்றொரு சரவணன், தி.நகரில் பிளாட்பாரத்தில் கடை வைத்துள்ள ராஜா, போரூர் முகலிவாக்கத்தை சேர்ந்த மணிகண்டன், புளியந்தோப்பை சேர்ந்த கால்பந்து வீரர் பிரசன்னா ஆகிய 5 பேர் போலீசில் புகார் செய்தனர்.

இந்தப் புகார் மீது அடையாறு உதவி கமிஷனர் மோகன்ராஜ் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர், ஆண்களிடம் மிஸ்டு கால் கொடுத்து பேசுவார். அவர்கள் வசதி படைத்தவர்கள் அல்லது பெண்கள் மீது ஆசை உள்ளவர்கள் என்று தெரிந்தால் அவர்களிடம் தொடர்ந்து பேச்சு கொடுப்பார். அவர்களை மயக்கி உல்லாச வாழ்க்கை வாழ்வதோடு, திருமணமும் செய்வார்.

பின்னர், குடும்பத்தை விட்டு பிரித்து தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று வற்புறுத்துவார். பின் ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்று பெண்கள் தங்கும் விடுதிக்கு செல்வார். திருமணமான தகவல் தெரிந்தால் தங்கும் விடுதியில் தங்க அனுமதி கிடைக்காது. மேலும், “ஐஏஎஸ்சுக்கு படிப்பதால் திருமணம் ஆன பெண் என்று தெரிந்தால் யாரும் மதிக்க மாட்டார்கள்.

எனவே, நமக்கு திருமணம் நடந்த விஷயத்தை நான் யாரிடமும் சொல்ல மாட்டேன். நீயும் யாரிடமும் சொல்லாதே” என்று கணவரிடம் சத்தியம் வாங்கிக் கொள்வார்.
அதை மதித்து ஏமாந்த வாலிபர்கள், சஹானாசை தொந்தரவு செய்வது இல்லை. தங்கும் விடுதி கட்டணம், படிப்பிற்கான கட்டணம் என்று பணம் கரைந்து போகும். ஆனால், சஹானாஸ் எதையும் கண்டு கொள்ளாமல் அடுத்த ஆண்களை தேடிச் செல்வார். அங்கு ஏமாறும் ஆண்களிடமும் இதே பாணி தொடர் மோசடியில் ஈடுபடுவார்.

புளியந்தோப்பை சேர்ந்த பிரசன்னா, சில நாட்களுக்கு முன்புதான் ஏமாந்ததை உணர்ந்தார். இதுகுறித்து சஹானாசிடம் கேட்டபோது, பல போலீஸ் அதிகாரிகளைத் தெரியும் என்று மிரட்டியுள்ளார். ஆனாலும் அவர் மீது உள்ள ஆசையால் தொடர்ந்து அவருடன் பழகி வந்துள்ளார். அப்போது, வடசென்னையில் உள்ள ஒரு பெண் இன்ஸ்பெக்டர், சஹானாவை விசாரணைக்கு அழைத்துள்ளார். சஹானாவுடன் பிரசன்னாவும் சென்றுள்ளார்.

அப்போது போலீஸ் நிலையத்தில் நின்றிருந்த வாலிபரை காட்டி, அவரை ஏன் திருமணம் செய்து ஏமாற்றினாய் என்று சஹானாசிடம் இன்ஸ்பெக்டர் கேட்டுள்ளார். அப்போது அருகில் நின்ற பிரசன்னா, மேடம் இது என்னுடைய மனைவி என்று கூறியுள்ளார். ஆனால், அந்த பெண் இன்ஸ்பெக்டரோ நடிகர் வடிவேலு படத்தில் வரும் காட்சிபோல, முதலில் அவர்தான் புகார் கொடுத்தார். அதனால், முறைப்படி சஹானாஸ் அந்த வாலிபருக்குத்தான் சொந்தம் என்று கூறி தீர்ப்பளித்துள்ளார். ஆனால், சஹானாஸ் தன்னுடன் வாழ்வதாக பிரசன்னா கூறியதும், “அப்படியென்றால் சீட்டுக்குலுக்கி பார்த்து முடிவு செய்யலாம” என அந்த இன்பெக்டர் கூறியதாக தெரிகிறது.

பின்னர், பிரசன்னாவை காவல் நிலையத்துக்கு வெளியில் இருக்கும்படி கேட்டுக் கொண்ட சஹானாஸ், தான் யாருடனும் செல்ல விரும்பவில்லை. ஐஏஎஸ் படிக்க விரும்புகிறேன். நான் தனியாக விடுதியில் தங்கப்போகிறேன் என்று கூறிவிட்டு, போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியில் வந்து விட்டார். அவர் புகார் கொடுத்த வாலிபருடன் செல்ல விரும்பாததால், இன்ஸ்பெக்டரும் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி விட்டார்.

போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியில் வந்த சஹானாசிடம், பிரசன்னா நடந்ததை பற்றி கேட்டுள்ளார். “இவர் என்னுடைய அண்ணன். என் மீதுள்ள கோபத்தில் இப்படி புகார் கொடுத்திருக்கிறார்” என்று சஹானாஸ் சமாளித்துள்ளார். சில நாட்களில் பிரசன்னாவிடம் இருந்தும் பிரிந்து சென்று விட்டார் என்று விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் கூறினர்.

பாதிக்கப்பட்டவர்கள் வரிசையாக புகார்களை கொடுக்க ஆரம்பித்ததும், போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இப்போது போலீஸ் அதிகாரிகளையும் அவர் ஏமாற்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தனக்கு பல போலீஸ் அதிகாரிகளை தெரியும். அவர்களும் என்னுடைய உறவினர்கள்தான் என்று சிலரது பெயர்களை கூறி வாலிபர்களை சஹானாஸ் மிரட்டியுள்ளர்.

இதனால் போலீஸ் அதிகாரிகளையும் ஏமாற்றியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். சஹானாசை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போலீசில் புகார் செய்ததற்காக பிரசன்னாவை சஹானாஸ் நேற்று முன்தினம் இரவு போனில் மிரட்டியுள்ளார். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த தகவல் அவருக்கு உடனே தெரிந்துள்ளது. சஹானாசுக்கு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து தகவல் கொடுத்தது யார் என போலீசார் விசாரணை நடத்துகின்றனர். மேலும் அவர் சென்னையிலேயே பதுங்கியிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

பல்வேறு விடுதிகளில் வாசம்

திருமணம் ஆனாலும் சஹானாஸ் வீட்டில் தங்கியதை விட தங்கும் விடுதிகளில்தான் அதிகமாக தங்கி உள்ளார். நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை என சென்னையில் 10க்கும் மேற்பட்ட விடுதிகளில் தங்கி உள்ளார். எனவே, சஹானாஸ் தங்கி இருந்த தங்கும் விடுதிகளில் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அங்கு சஹானாசிடம் ஏமாந்தவர்கள் பட்டியல், டைரி ஏதாவது சிக்கும் என்பது போலீசாரின் எண்ணம்.

கணவனை மிரட்டிய சஹானாஸ்

சஹானாஸ் மீது புகார் கொடுத்த பிரசன்னாவை நேற்று முன்தினம் செல்போனில் தொடர்பு கொண்ட சஹானாஸ் “என்னை வெளி உலகத்துக்கு காட்டி கொடுத்த உன்னை சும்மா விடமாட்டேன். இதன் விளைவை நீ சந்தித்தாக வேண்டும். எனக்கு நிறைய உயர் அதிகாரிகளை தெரியும். அவர்கள் மூலம் உன்னை கவனித்து கொள்கிறேன்” என்று கூறிவிட்டு தொடர்பை துண்டித்துள்ளார். இதனால், பதறிப்போன பிரசன்னா நேற்று மதியம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு பெற்றோருடன் வந்து புகார் அளித்தார். அதில், தனக்கும் குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

விசாரணை நடத்துவது யார்?

மோசடி பெண் குறித்து போலீஸ் கமிஷனரிடம் முதற்கட்டமாக 5 புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரை அடையார் உதவி கமிஷனர் விசாரிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. அவரிடம் கேட்டால், அடையார் இன்ஸ்பெக்டர் விசாரிப்பதாக தெரிவித்துள்ளார். அடையாறு இன்ஸ்பெக்டரிடம் கேட்டால், வடபழனி போலீசுக்கு விசாரணை மாற்றப்பட்டுள்ளதாக கூறினார். வடபழனி போலீசாரோ, விசாரணை உத்தரவு எங்களுக்கு வரவில்லை என்கின்றனர். இதனால், இது பற்றி யாரிடம் கேட்டாலும் விசாரிக்கும்படி எனக்கு உத்தரவு வரவில்லை என்கின்றனர். இதனால், ஆண்கள் ஏமாந்த கதையை யார் விசாரணை செய்வது என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

சிரித்து பேசி கவிழ்ப்பதில் கில்லாடி

சஹானாஸிடம் சிக்கி சீரழிந்தவர்களில் ஒரு சிலர் மட்டுமே புகார் கொடுக்க முன் வந்திருக்கிறார்கள். கமிஷனர் அலுவலகம் வரை வந்து புகார் கொடுக்க தைரியமில்லாமல் ஒதுங்கி நின்றிருந்த ஒரு இளைஞரிடம் பேசினோம்.”சார்.. அவ பேச்சுல கில்லாடி. என்னிடம் சிரிச்சு சிரிச்சு பேசினா.. கவுந்துட்டேன். நாலஞ்சு நாள்லியே பின்னாடியே வரவெச்சுட்டா. ஒருநாள், ஓட்டலுக்கு வரச் சொன்னா. போனேன். கையப் பிடிச்சுக்கிட்டு, நெருக்கமா உக்காந்து பேசுனதுலியே கிறங்கிட்டேன். ‘ஹேய்.. உங்க ஊர் பசங்க ரொம்ப வீக்.. இதுக்கே இப்படி ஆயிட்ட..’ என்று சொன்னாள்.

அவளிடம் உண்மையிலேயே தமிழக ஆண்களை கவிழ்க்கும் ரகசியம் இருந்ததை, அடுத்தடுத்த தனிமை சந்திப்புகளில் அறிந்து கொண்டேன். தெரிஞ்சுதான் எல்லாம் இழந்தேன். அதனால் அமைதியாக ஒதுங்கிவிட்டேன். அவளுடன் சந்தோசத்தை அனுபவித்தேன். அதற்கு பணத்தை இழந்தது சரியாகிவிட்டது என்றனர்..
 
Top