புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


யாழ்ப்பாணத்தில் என்ன குதூகலம் என்ன ஒரு மாற்றம் சில நாட்களுக்குள். நாளுக்கு நாள் மாறிவரும் யாழ்ப்பாணத்தை நம்பவே முடியவில்லை. மாற்றங்கள் அவசியம் தான் அதுவே சீரழிவிற்கு இட்டுச் செல்லக்கூடாது.
யாழ் நகரப் பகுதி கிராமங்கள் சிற்றூர்கள் எல்லாமே அடையாளமே தெரியாமல் மாறியுள்ளது. பல்லினக் கலாச்சார வருகை அங்கு உள்ளவர்கள் மீதும் ஒட்டிக் கொண்டுள்ளது.
போர் முடிவடைந்த இந்தக் கால கட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து மக்களின் வருகை, பணப் பிளக்கம் என்பவற்றால் யாழ் மக்கள் கண்மூடித் தனமாக பணத்தினைச் செலவு செய்கின்றனர். மக்களின் மனதில் மண்ணையே மீட்டது போல் நினைப்பு. அவ்வளவு சுதந்திரம் இரவு இரவாக வீதிகளில் சன நடமாட்டம் பார்கள்(bar ) வீடியோ சென்ரர்கள், இன்டநெற் கபேகள், அழகு நிலையங்கள் என யாழில் மூலை முடுக்கெல்லாம் வர்ண ஜாலம் காட்டுகின்றன.
இதற்கிடையில் இளசுகள் எல்லாம் உரிமையைப் பெற்றுவிட்டோம் என்ற ஒரு எண்ணத்தில் கூத்தாடுகின்றனர். ஆண்கள் பெண்கள் என வித்தியாசம் தெரியவில்லை..பண்பாடு கலாச்சாரம் எல்லாம் முள்ளிவாய்க்கால் மனிதப் புதை குழிக்குள் புதைக்கப்பட்டுள்ளதோ தெரியவில்லை…ஈரளவு கூட பண்பாடு கலாச்சாரத்தைக் காணமுடியவில்லை.
எங்கு பார்த்தாலும் காதல் ஜோடிகள் கேட்க்க யாரும் இல்லாதது போல் வீதிகளில் கை கோர்த்து குதூகலிக்கின்றனர். காதல் ஜோடிகளுக்கு பிரத்தியேகமாக கட்டப்பட்டது போல் யாழ் நூலகத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள ஆசனங்களில் இருந்து கொஞ்சிக் குலாவுகின்றனர் இளசுகள்.
அண்மையில் நடைபெற்ற நல்லூர்க் கந்தன் திருவிழாவில் என்றுமில்லாதவாறு மக்கள் வெள்ளம் அலை மோதியது. ஆண்கள் பெண்கள் என வர்ண ஜால ஆலயத்திற்கே பொருத்தமற்ற உடைகளில் கந்தனை தரிசித்து வந்தனர்.
அதில் பணத்தினை நகைகளை பறிகொடுத்தவர்கள் எத்தனையோ பேர்…இதில் மனசைத் தொலைத்தவர்கள் கூட அடங்குவர். அந்தளவிற்கு ஆலயங்கள் காதலுக்கு கொடியேற்றும் இடமாக மாறியுள்ளது.
இதைவிட ஐஸ் கிரீம் கடைகள் பேரூந்து நிலையங்கள்,இன்டநெற் சென்ரர்கள் போன்றன காதலை வளர்க்கும் இடங்களாக மாறிவருகின்றன.
இத்தனைக்கும் யாழில் பாதுகாப்பு அதிகாரிகள் போலீசார்கள் என குவிந்து காணப்படுகின்றனர். இவர்கள் இருக்கும் இடங்களில் தான் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாக ஆங்காங்கே கதை அடிபடுகிறது.
நாளுக்கு நாள்அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள் வயது வித்தியாசம் இன்றி சிறுவர் துஸ்பிரயோகம்,சிசுக் கொலைகள் என யாழ்ப்பாணத்தைச் சுற்றியிருக்கும் வன்முறைச் சம்பவங்களுக்கு முடிவே இல்லையா..?
அதிகாரிகள் இதனைக் கண்டும் காணாதது போல் இருக்கின்றார்களோ தெரியவில்லை. இந்த கலாசார சீர்கேடுகளை இல்லாதொழித்து யாழ்ப்பாணத்துக்கே உரிய பண்பாடு கலாச்சாரங்களை மக்கள் மனதில் வளர்க்க வேண்டும் என உரிய அதிகாரிகளிடம் தமிழ் சி என் என் கேட்டுக் கொள்கிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top