
கடந்தாண்டு அக்டோபர் மாதம் 30ஆம் திகதி இவர்கள் வைத்திருந்த ரூ.8 ஆயிரம் காணாமல் போனது. 18 வயது பெண் மீது அவர்களுக்கு சந்தேகம் எழுந்தது.
அவளிடம் விசாரித்தனர். எடுக்கவில்லை என்று அவளும் எவ்வளவோ சொன்னாள். இவர்கள் கேட்கவில்லை.
அவளுக்கு ‘பலாத்கார’ தண்டனை வழங்க முடிவெடுத்த அவர்கள் அவளை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிக்கொண்டு பறந்தனர். வெளியே சத்தம் கேட்டால் பிரச்னையாகிவிடும் என்பதால், பாதுகாப்பான இடம் தேடி அலைந்தனர்.
ஒரு மணி நேரம் சுற்றிய பிறகு, ஆள் அரவம் இல்லாத இடத்துக்கு அவளை இழுத்து சென்றனர். டீன்ஏஜ் பெண்ணின் முடியை எலிசபெத் இழுத்து பிடித்துக்கொள்ள, பாய் பிரெண்ட் மேத்யூ அவளை பாலியல் ரீதியாக துன்புறுத்தினான்.
மயங்கிய அவளை அங்கேயே விட்டுவிட்டு இருவரும் தப்பினர். கடைசியில், அந்த பணத்தை வேறு யாரோ எடுத்து சென்றது அவர்களுக்கு தெரிந்தது.
இதற்கிடையில், டீன்ஏஜ் பெண் கொடுத்த புகாரின் பேரில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஐல்ஸ்பரி கிரவுன் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
எலிசபெத்தின் பாய் பிரெண்ட் மாத்யூ அளித்த வாக்குமூலத்தில், டீன்ஏஜ் பெண்ணை பலாத்காரம் செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை. எலிசபெத் கட்டாயப்படுத்தியதால் அவ்வாறு செய்தேன் என்று கூறினார்.
இதையடுத்து எலிசபெத்துக்கு 12 ஆண்டு சிறை தண்டனையும், மேத்யூவுக்கு 9 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
0 கருத்து:
கருத்துரையிடுக