புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பல் துலக்குவதற்கும் மறதி நோய்க்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இத்தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து கலிபோர்னியா ஆராய்ச்சியாளர்கள் கூறியிருப்பதாவது: தினசரி ஒரு முறை மட்டுமே பல் துலக்குவது நினைவாற்றலை பாதித்து மறதி நோயை ஏற்படுத்தும். எனவே காலை மாலை இரவு என அன்றாடம் 2 அல்லது 3 முறை வாய் மற்றும் பற்களை சுத்தப்படுத்துவது அவசியம்.  உணவு உண்ட பின் நல்ல தண்ணீரில் வாய் கொப்பளிப்பதன் மூலம் வாய் துர்நாற்றம், பல் சொத்தை பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும். இரவு படுக்க போகும் முன்பு அவசியம் பல் துலக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.  தினமும் ஒரு முறை மட்டுமே பல் துலக்கும் பழக்கம் உள்ளவர்களை மறதி நோய் தாக்கும் சாத்தியம் 65 சதவீதம் அதிகம் உள்ளது. உடல் ஆரோக்கியத்துக்கு ஓரல் ஹைஜீன் எனப்படும் வாய் மற்றும் பல் சுத்தம் அவசியம் என்பதை அவ்வப்போது மருத்துவ உலகம் வலியுறுத்தி வருகிறது. எனவே, 2 அல்லது 3 முறை தினமும் பல் துலக்கினால் மறதி நோய் பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம். குறிப்பாக பெண்கள் தினசரி குறைந்தது 2 முறை பல் துலக்குவது அவசியம். இது அவர்களின் நினைவாற்றலை கூர்மையாக்கும். மறதி நோயை விரட்டும் இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top