புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக விஜய் ரீவி இல் நடைபெற்று வந்த சூப்பர் சிங்கர் யூனியர் 3 பைனல் இன்று நிறைவுக்கு வந்துள்ளது.ஆரம்பத்தில் நூற்றுக்கணக்கான யூனியர் பங்குகொண்டு ஆரம்பித்த இச் சுப்பூர் சிங்கர் யூனியர் திறமையானவர்களை தேர்ந்தெடுத்து கடந்தவாரமாக மிகவும் சூப்பராக பாடிய 5 யூனியர்களோடு இன்று கடைசி சுற்று முடிந்துள்ளது.

எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டு 5 இளஞ்சிட்டுக்கள் ஒருவருக்கொருவர் சளைக்காமல் தம் திறமைகளை வெளிப்படுத்தி நன்றாகவே பாடினார்கள்.

இந்நிலையில் 10 வயதே நிரம்பிய ஆஜித் என்ற பையன் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை தன்னகத்தே கொண்டு இச்சூப்பர் சிங்கர் யூனியர் 3 இல் வெற்றி பெற்றுள்ளார்.

10 வயதே நிரம்பிய ஆஜித் என்ற இளஞ்சிட்டு வசீகரத் தோற்றத்தோடு மெருகூட்டும்வகையில் அழகாக ஆடை அணிகலங்களோடு, தன் வயதுக்கு மீறி கடினமான பாடல்களையும் பாடி நடுவர்களையும் பார்வையாளர்களையும் தன்பக்கம் ஈர்த்து இன்று வெற்றிவாகை சூட்டிய அப்பையனுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதோடு,

இரண்டாம் இடத்தைப் பெற்ற அமெரிக்காவில் இருந்து சென்று பங்குபற்றி இத்தனை மாதகாலமாகவும் தன் திறமையை வெளிப்படுத்திய பிரகதிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

சூப்பர் சிங்கர்  யூனியர்1இலும் 2இலும் பங்குபற்றி  திறமை போதாமையால் விலக்கப்பட்ட யாழினி சூப்பர் சிங்கர் யூனியர் 3இலும் பங்குகொண்டு இம்முறை 3ம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார். அடுத்தடுத்த இடங்களில் சுகன்யா, கெளதம் வந்துள்ளனர்.

ஏ.ஆர். ரஹ்மான் பாடிய வந்தே மாதரம் என்னும் பாடலை தனது முதலாவது தெரிவாகவும், இரண்டாவது தெரிவாக கண்ணீரே சந்தோஷ கண்ணீரே என்ற பாடலையும் பாடி வெற்றிபெற்ற ஆஜித் ஒரு Born Superstar என்ற பட்டத்தை ஏ.ஆர்.ரஹ்மான் வழங்கி வாழ்த்தியதோடு அவருடைய KM Music Conservatory என்னும் இசைப்பள்ளியில் இலவசமாக சங்கீதம் கற்க ஸ்கொலர்சிப் வழங்கினார். வெற்றிபெற்ற ஆஜித் க்கு 60 இலட்சம் பெறுமதியான வீடு பரிசாக கிடைத்துள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top