புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


 மனிதன் எப்போது தோன்றினானோ அப்போதே காதலும் தோன்றி விட்டது. ஏனெனில் மனிதனுக்கு இயல்பாக உள்ள உணர்ச்சிகள் இரண்டு. ஒன்று காதல். மற்றது வீரம். ஆகவே காதலை வெளிப்படுத்துகின்ற மார்க்கங்களும் அக்காலத்திலேயே தோற்றம் பெற்று இருக்க வேண்டும் என்பது வெளிப்படை.


ஒருவரோடு இன்னொருவருக்கு ஏற்படுவதாய் உள்ள காதலை வெளிப்படுத்த வல்ல சிறந்த ஊடகம் கடிதம்தான். அப்படியானால் காதல் கடிதமும் தொன்று தொட்டு பாவனையில் இருந்து வந்திருக்க வேண்டும்தானே?

உலகில் காதல் கடிதத்தின் பாவனை எப்போது ஆரம்பமானது? என்பதை எம்மால் எடுத்துச் சொல்ல முடியாதுதான். ஆனால் அகழ்வாராய்ச்சியாளர்கள் இது வரை கண்டுபிடித்தவற்றுக்குள் மிகவும் காலத்தால் முந்தியதாக உள்ள காதல் கடிதம் பற்றியே நாம் இங்கு பேசுகின்றோம்.

துருக்கியில் உள்ள இஸ்தான்பூல் தொல்பொருள் மியூசியத்தில் இக்காதல் கடிதம் இன்றும் உள்ளது. ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் இருந்து 150 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள Niffer Valley என்கிற இடத்தில் கி.மு 2200களில் இக்கடிதம் எழுதப்பட்டு இருக்கின்றது. இதை அறிகின்றபோது பலரும் ஆச்சரியப்படத்தான் செய்கின்றார்கள்.

அந்தக் காலங்களில் கடதாசிகளில் மக்கள் எழுதி இருக்கவில்லை. இக்கடிதம் மிகப் பழைமையான காலத்து பேஷனை கொண்டு இருக்கின்றது. ஆயினும் மிகவும் அருமையான வாசகங்கள் இதில் காணப்படுகின்றன. கல்லால் செதுக்கப்பட்ட தட்டு ஒன்றின் மேல் கடிதம் எழுதப்பட்டு இருக்கின்றது.

Philadelphia பல்கலைக்கழக பேராசிரியரான Noah Kramer அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டபோது 1889 ஆம் ஆண்டு இக்கடிதத்தை கண்டு பிடித்தார். ஆயினும் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தவற்றை வாசித்து விளங்கிக் கொள்கின்றமைக்கு 58 வருடங்கள் எடுத்து இருக்கின்றன.

சுமேரிய மொழியில் நிபுணத்துவம் பெற்ற வல்லுனர்கள் பகீரத முயற்சிகளை தொடர்ந்து இக்கடிதத்தை வாசித்து விளங்கிக் கொண்டார்கள். Muazzez Longso, Hatice ஆகிய இரு நிபுணர்கள் இக்கடிதத்தை முழுமையாக மொழிபெயர்த்தனர். இக்கடிதத்தின் பூர்வீகத்தை கண்டுபிடித்தனர். இது கவிதை வடிவிலான காதல் கடிதம்.

இக்காதல் கடிதம் சுமேரியாவைச் சேர்ந்த உயர்நிலை பாதிரியான இன்னானா என்பவரால் எழுதப்பட்டு இருக்கின்றது. முதல் இரவின்போது கணவனுக்காக காதல் கவிதை ஒன்றை மனைவி எழுதுகின்ற வழக்கம் அக்காலத்தில் அங்கு இருந்து வந்து இருக்கின்றது. இந்நிலையில் கணவனுக்காக இக்கவிதையை முதல் இரவில் எழுதி இருக்கின்றார். இக்காதல் கடித கவிதை அற்புதமான அர்த்தங்களை கொண்டு இருக்கின்றது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top