புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சுவிட்சர்லாந்தில் கிராபூண்டென் மாநிலத்தில் 42 வயதுடைய ஒரு தாய் தனது நான்கு வயது மகனுடன் சிறிய கறுப்பு நிற ஃபியட் காரில் வந்து கொண்டிருந்தார்.இடையில் திடீரென்று ஒரு மான் குதித்தோடியது. மான் மீது ஏற்றாமலிருக்க காரை திசை திருப்பியதில் எதிரே வந்த ரயில் மீது கார் மோதியது. இதில் கார் நசுங்கி உருண்டோடி கீழே விழுந்தது.


ரயில் ஓட்டுநரின் கவனத்தைத் தன் பக்கம் திருப்ப அப்பெண் முயன்றும் முடியவில்லை. காப்பாற்ற நினைத்த மான் இடையில் வந்து அடிபட்டு இறந்து கிடந்தது. ரயில் பயணிகளில் எவருக்கும் காயமோ உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை.

காரின் பின் இருக்கையில் "பெல்ட்" டால் இணைக்கப்பட்டிருந்த சிறுவனை பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தனர். சிராய்ப்புகளுடன் அற்புதமாக அவன் உயிர் பிழைத்தான்.

RLB ரயில்பாதையில் பல மணி நேரங்களுக்குப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ரயில் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியதை தொடர்ந்து அதனைச் சரிசெய்ய நீண்ட நேரமாயிற்று.

சுவிஸ் செய்தித்தாளுக்குப் பேட்டி அளித்த சிறுவனின் பாட்டி, "என் பேரன் உயிர் பிழைத்தது அதிசயம் தான்" என்று கூறி மகிழ்ந்தார். இது பற்றி காரை ஓட்டிய அப்பெண் கூறுகையில், ரயில் கார் மீது மோதி அதைப் புரட்டி நசுக்கியதைத்தான் எங்களால் பார்க்க முடிந்தது.

அதன் உள்ளேயிருக்கும் மகன் என்ன ஆனானோ என்று தவித்துப் போனேன், மகன் உயிரோடு நலமாக இருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது என கண்ணீர் மழ்க தெரிவித்துள்ளார்.


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top