புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால், பெண் குழந்தையை அடித்தே கொன்ற அம்மாவை மும்பையில் போலீசார் கைது செய்தனர்.மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் மண்டை ஓடு, மார்பு எலும்புகள் உடைந்த நிலையில் அஹுதி என்ற 3 மாத பெண் குழந்தை கடந்த வாரம்
அனுமதிக்கப்பட்டது. தலைக்குள் ரத்த கசிவும் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள், காயத்துக்கான காரணங்களை குழந்தையின் பெற்றோர் கல்பேஷ் ஜோஷி, தர்மிஷ்தாவிடம் கேட்டனர்.

குழந்தை மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டதாக கூறினர். அவர்கள் பதிலில் டாக்டர்களுக்கு திருப்தி ஏற்படவில்லை. சந்தேகம் ஏற்பட்டதால் இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதற்கிடையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது.

பிரேத பரிசோதனையில், குழந்தையின் தலையில் இருந்த காயங்கள், தவறுதலாக கீழே விழுந்து ஏற்பட்ட காயங்கள் போல் இல்லை என்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். குழந்தையின் அம்மா தர்மிஷ்தா மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து விசாரித்ததில், குழந்தையை கொடூரமாக அடித்து கொன்றதை ஒப்புக் கொண்டார்.

தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் குழந்தையின் தலையிலும், மார்பிலும் அவர் ஓங்கி அடித்ததாக கூறினார். கோபம் கண்ணை மறைத்துவிட்டதால் இப்படி கொடூரமாக நடந்து கொண்டுவிட்டதாக கூறி கதறி அழுதார்.


விசாரணைக்குப் பிறகு தர்மிஷ்தாவை போலீசார் கைது செய்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top