புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு




1.மேசம்:-மேசராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும்.நவம்பர்12,13,14முன் கோபம் தவிர்த்தல் உகந்ததாகும். உத்தியோகத் துறையினர்களுக்கு பதவி உயர்வுகளுடன் கூடிய பணி இட மாற்றம் ஏற்படக் கூடும்.எதிர் பாராத விருந்தினர்கள் வரவால் சில ஆதாயங்களை அடையலாம்.குல தெய்வ வழிபாடு செய்து வருவது நல்லது.புதிய தொழில்களை ஆரம்பம் செய்ய முயற்சிகள் செய்வீர்கள். தீராத பிரச்சனைகளுக்கு பெரிய மனிதர்கள் உதவியால் தீர்வு கிடைக்கும்.நவம்பர்15,16,17 உடம்பில் சளி அலர்ஜி போன்ற நோய்கள் வந்து போகும்.திடீர் அதிர்ஷ்டம் மூலம் தன வரவு உண்டாகும். வராத கடன் கொடுத்துள்ள பணம் திரும்பக் கை வந்து சேரும்.சிலருக்கு வீடு மற்றும் தொலிற் சாலைகள் இடமாற்றம் ஏற்படலாம். தென்திசையில் இருந்து பெண்களால் ஆதாயம் உண்டாகும். சமுதாய முன்னேற்றத்திற்கான பொதுத் தொண்டுகளில் ஈடுபட்டு மன நிறைவடைவீர்கள்.உறவினர்களின் எதிர் பாராத வரவுகளால் பொருட் செலவுகள் வந்து சேரும். யாத்திரையின் போது சம்பந்தம் இல்லாத நபர்களால் சில நன்மைகள் வந்து சேரும்.நவம்பர்18நாட் பட்ட வழக்கு விசயங்களில் நல்ல செய்திகள் வந்து சேருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தாய் தந்தையர்கள் உறவுகளில் வந்துள்ள பிரச்சனைகள் தீரும்.வெளிநாடு செல்லுவதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேரும். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-8
இராசியான நிறம்:-நீலம்.
இராசியான திசை:-தென்மேற்கு
பரிகாரம்:-ஐயப்பன் வழிபாடு செய்த வரவும்.

2.ரிசபம்:-ரிசபராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும்.நவம்பர்12,13,14சொத்து விசயமான நாட்பட்ட வழக்குகளுக்குச் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும்.வேற்று மதத்தவரகளால் எதிர் பார்த்த ஆதாயம் இல்லை. மஹான்களின் எதிர் பாராத தரிசனங்களால் மன நிம்மதியை அடைவீர்கள். செய் தொழிலில் பங்காளிகளுடன் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவும்.காதல் விசயங்களில் வெற்றி தேடித் தரக் கூடிய காலமாகும்.நவம்பர்15,16உடம்பில் வயிறு மூலம் சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும்..வங்கிகளின் மூலமாக எதிர் பார்த்திருந்த கடன் உதவித் தொகைகள் கிடைத்து வீட்டைத் திருத்திக் கட்டுவதற்கு முயற்சி செய்வீர்கள். இது நாள் வரையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.குடும்ப நன்மைகளுக்காகச் சகோதரர்களால் அனுகூலம் ஏற்படும்.வெகு காலமாக மறைமுகமாக இருந்து வந்துள்ள எதிரிகளின் தொல்லைகள் தீரும். நவம்பர்17,18ப10 பழம் போன்ற வியாபாரிகள் ஆலயப் பணி செய்வோர்கள்,வக்கீல்கள்,நீதிபதிகள் பேராசிரியர்களுக்கு மற்றும் சேர்மார்க்கெட்,நறுமண பொருட்களின் வியாபாரிகள்,
அநாதை ஆசிரமங்களை நடத்துவோர்கள்,தங்கம் வெள்ளி போன்ற நகை கடைகள் நடத்துபவர்கள்,பைனான்ஸ் தொழில் செய்வோர்களுக்கு நற்பலன் உண்டாகும்.வராத கடன் கொடுத்து இருந்த பணம் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-3
இராசியான நிறம்:-மஞ்சள்
இராசியான திசை:-வடகிழக்கு
பரிகாரம்:-தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து கடலை தானம் செய்து வரவும்.

3.மிதுனம்:-மிதுனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்குப் கேது நன்மை தரும் கிரகமாகும்.நவம்பர்12,13புதிய வீடு நிலம் வாங்க எடுத்துக் கொண்ட நீண்ட கால முயற்சிகளில் நல்ல பலன் உண்டாகும்.பக்கத்து வீடுகளில் பக்குவமாகப் பேசிப் பழகுவதால் பிரச்சனைகள் குறையும்.விட்டுப் போன பழைய பிரச்சனைகள் மீண்டும் தொடரும். வெளி நாடு சென்று வருவதற்கான முயற்சிகளைச் சற்று தள்ளிப் போடவும். நவம்பர்14,15,16மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களை கடன் கொடுப்பதை தவிர்த்தல் நல்லதாகும். ஆலய வழிபாடுகளால் மனநிம்மதி அடைவீர்கள்.புதிய கடன் வாங்கிப் பழைய கடனை அடைப்பதற்கான முயற்சிகளில் ஈடு படுவீர்கள்.குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வர வாய்ப்பு உள்ளது.பிரிந்து போன பழைய உறவுகள் மீண்டும் ஒன்று சேரும் காலமாகும்..துலை தூரப் பயணங்களால் லாபம் அடைவீர்கள்.நவம்பர் 17,18நண்பர்கள்.மற்றும் உறவினர்களால் பண வரவுகள் உண்டு.தந்தை மகன் உறவுகள் சுமாராகக் காணப்படும்.மீன் முட்டை மாமிசம் போன்ற உணவுப் பொருட்களின் வியாபாரிகள் நற் பலன்களை அடைவார்கள். உடல் நிலையில் வாய்�� பற்கள்��முகம் சம்பந்தமாகிய உபாதைகள் வந்து போகும். செய் தொழிலில் புதிய பிரச்சனைகள் ஏற்பட்டு சமாளித்துக் கொள்ளுவீர்கள்.பிறருக்காக ஜாமீன் போடுவதால் வீண் பிரச்சனைக்க ஆளாக நேரிடும்.கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-7
இராசியான நிறம்:-கருஞ்சிகப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-விநாயகர் வழிபாடு செய்து வரவும்.


4.கடகம்:-கடகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும்.நவம்பர்12புதிய நண்பர்களின் சேர்க்கையால் பொருள் இழப்பும்�� வீண் பிரச்சனைகளும் ஏற்படும்.நீண்ட தூரப் பயணங்களைத் தள்ளிப் போடவும்.கோர்ட்�� வழக்கு சம்பந்தமான விசயத்தில் அநுகூலமான நல்ல தீர்ப்புகளை எதிர் பார்க்கலாம். நவம்பர்13,14,15Nவுற்று மதத்தவரால் வெளிநாடு செல்லுதல் போன்ற முயற்சிகளில் நல்ல தகவல்கள் பலன் கிடைக்கும்.மூத்த சகோதரர்களால் குடும்பத்தில் சிற் சில பிரச்சனைகளைச் சந்தித்து மன நிம்மதி குறையலாம்.திரவ சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்வோர்கள்,பூஜைப் பொருள் வியாபாரிகள்,நீர்வளத்துறை சார்ந்தவர்கள்,தாய் சேய் நல விடுதிகளை நடத்துவோர்கள்,உப்பு வியாபாரிகள்,படம் மற்றும் கண்ணாடி போன்ற பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள்,மருத்துவத் துறைகளைச் சார்ந்தவர்கள்,மருந்துவக் கல்லூரி மாணவர்கள் ஆகியோர்கள் நற் பலன் அடைவார்கள். நவம்பர்16,17,18வங்கிகளில் இருந்து எதிர் பார்த்த கடன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பூமி��நிலம் வாங்குதல் போன்ற நீண்டகால முயற்சிகளில் தற்போது வெற்றி அடைவீர்கள்.பெண்களால் தூரத்தில் நற் செய்திகளைக் கேட்பீர்கள்.திருட்டுப் போன பொருட்கள் திரும்ப வீடு வந்து சேரும்.உடல் நலத்தில் மூலம்�� வயிறு சம்பந்தமாகிய தொல்லைகள் வந்து போகும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-2
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-மேற்கு
பரிகாரம்:-அம்மன் வழிபாடு செய்து அரிசி தானம் செய்து வரவும்.


5.சிம்மம்:-சிம்மராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும்..நவம்பர்12,13இரசாயனம்,அணு ஆராய்ச்சி போன்ற துறை சார்ந்தவர்கள், பழைய பொருட்கள்,மீன் முட்டை மாமிசம் போன்ற உணவுப் பொருட்களின் வியாபாரிகள்,வட்டித் தொழிற் செய்வோர்கள்,ஏஜன்சி குத்தகை போன்ற தொழிற் செய்வோர்கள்,பழைய இரும்பு மற்றும் பேப்பர் பிளா~;டிக் சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள்; நல்ல லாபம் பெற வாய்ப்பு உள்ளது. உடம்பில் கண் காதுகளில் கவனமுடன் இருக்கவும்.நவம்பர்14,15
பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து வந்த தொல்லைகள் மேலும் தொடரும் என்பதால் கவனமுடன் செயல் படுவது நல்லது.புதிய வீடு��நிலம் வாங்குவது போன்ற விசயங்களைச் சற்று காலதாமதமாக செய்வது உகந்ததாகும். நண்பர்களிடம் காரணமற்ற மனக் கசப்புகள் ஏற்பட்டு பிரச்சனைகள் உருவாகலாம்.
நவம்பர்16,17,18உத்தி யோகம் செய்பவர்களுக்கு இடையூறுகள் வந்து போகும்.விருந்தினர்களின் வரவால் பொருட் செலவுகள் உண்டாகும்.உறவினர்கள் மற்றும் நண்பர்களின் திடீர் வரவுகளால் பொருட் செலவுகள் வந்து சேரும்.வெளி நாட்டில் இருப்பவர்கள் தாய் நாடு சென்று வருவீர்கள்.விவசாயம் செய்வோர்கள்�� .கமிசன் தொழில்
கள்��சேர் மார்க்கெட் நடத்துபவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தராத வாரமாகும்.
இராசியான எண்:-4
இராசியதன நிறம்:-கருப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-பிதுர் வழிபாடு செய்து வரவும்.


6.கன்னி:-கன்னிராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்.நவம்பர்12பிள்ளைகளின் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு பொருட் செலவுகள் உண்டு.காதல் சம்பந்தமான பெண்கள் விசயத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவும். பங்குத் தொழிலில் ஈடு படுபவர்களுக்கு நஷ்டத்தை அடைய வாய்ப்பு இருப்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் ஈடு படுவது நல்லது.நவம்பர்13,14,15எழுத்துப்பணி செய்வோர்கள்,வங்கிப் பணியாளார்கள்,காய்கறிகள் இலை கீரை போன்ற உணவுப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வியாபாரிகள்,தபால் தந்தித் துறையைச் சார்ந்தவர்கள்,அச்சுத் தொழிற் செய்வோர்கள்,எழுத்தாளர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள்..பொருளாதாரத்தில் இன்னும் சில நெருக்கடிகள் உண்டாகும்.நவம்பர்16,17,18 புதிய தொழில்களை ஆரம்பம் செய்வதற்கான முயற்சிகளைச் சிறிது காலம் தள்ளிப் போடுதல் நல்லது.உடம்பில் வாயு மற்றும் வயி;று சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணப் புழக்கம் நன்றாக இருக்கும. கொடுக்கல் வாங்கலில் நாணயம் காப்பாற்ற இயலாத நிலை இருப்பதால் புதிய கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். யுhத்திரையின் போது சம்பந்தம் இல்லாத விசயங்களுக்காக வீண் பிரச்சனைகள் வந்து விலகும்.காணாமற் போன பொருட்கள் திரும்பக் கிடைக்கக் கூடிய காலமாகும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தராத வாரமாகும்.
இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
பரிகாரம்:-மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.


7.துலாம்:-துலாம்ராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும்.நவம்பர்12தீர்த்த யாத்திரை சென்று வரப் போட்ட திட்டங்கள் நிறைவேறும்.வண்டி வாகனங்களில் செல்லுவோர்கள் யாத்திரையின் போது பெரிய மனிதர்கள் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் நன்மைகள் அடைவீர்கள்.பிள்ளைகளால் எதிர் பாராத தன வரவுகள் உண்டாகுவதோடு அவர்களால் பொருட் செலவும் உண்டாகும்.நவம்பர்13,14,15ரேஸ் லாட்டரி போன்றவற்றின் மூலம் திடீர் தன வரவுகள் நெருப்ப,கேஸ்,சிற்றுண்டி சாலைகள்,அரிசி மற்றும் பலசரக்கு சம்பந்தமாகிய தொழிற் செய்பவர்கள்,அரசியல் வாதிகள், நீதிமன்றத்தில் பணி புரிவோர்கள்,வழக்கறிஞர்கள் மருந்து வியாபாரிகள்,மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடையலாம்குடும்பச் சொத்துக்கள் பிரிவினை போன்ற விசயத்தில் நல்ல முடிவுகள் கிடைக்கும்.உத்தியோகத் துறையினர்களுக்குப் பணி இட மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.நவம்பர்16,17,18 வேலை இல்லாத படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் தேடி வரும் காலமாகும். வேற்று மதத்தவரால் ஆதாயம் ஏதும் இல்லை. வரவேண்டிய சொத்துக்கள் திரும்பக் கை வந்து சேரும் காலமாகும். நண்பர்களால் வீண் பொருட் செலவுகளும் மன நிம்மதிக் குறைவும் ஏற்படலாம்.திருமணம் போன்ற சுபகாரிய விசயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-1
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-கிழக்கு
பரிகாரம்:-சூரிய நமஸ்காரம் வழிபாடு செய்து வரவும்.



8.விருச்சிகம்:-விருச்சிகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.நவம்பர்12குடும்பத்தில் இதுநாள் வரையில் தடை பட்டு வந்த திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும்.தூரத்து யாத்திரையின் மூலமாக சந்திக்க வேண்டிய நபர்களைச் சந்தித்து காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளுவீர்கள்.
நவம்பர்13,14,15,16 உடம்பில் மேகம் மற்றும் உ~;ண சம்பந்தமான பீடைகள் வந்து விலகும். குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வருவதற்காக முயற்சி செய்வீர்கள். வராத கடன் கொடுத்து இருந்த பணம் திரும்பக் கைக்கு வந்து சேரும் காலமாகும்.நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில்கள்,இராணுவத் தொழில்,போலீஸ்,தீயணைப்பு துறையை சார்ந்தவர்கள்,ஹோட்டல் தொழிற் செய்வோர்கள்,கார சம்பந்தமான உணவுப் பொருட்களின் வியாபாரிகள்,கேஸ் வெல்டிங் போன்ற தொழிற் செய்வோர்கள்,நிலக்கரி தொழிற்சாலைகளில் பணிகள் செய்வோர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.
நவம்பர்17,18கலைத் துறையினர்களும் அரசியல்வாதிகளும் மிகவு
ம் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. யாத்திரையின் காரணமற்ற விசயங்களுக்காக வீண் பிரச்சனைகள் வர இருப்பதால் எச்சரிக்கையுடன் பயணம் செய்யவும். பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறி சற்று முன்னேற்றம் காணப்படும். காரணமற்ற சிறிய விசயங்களுக்காக குடும்பத்தில் சிற்சில பிரச்சனைகள் வந்து விலகும். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியன எண்:-9
இராசியன நிறம்:-சிகப்பு
இராசியன திசை:-தெற்கு
பரிகாரம்:-துர்க்கை வழிபாடு செய்து துவரை தானம் செய்யவும்.


9.தநுசு:-தநுசுராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்.நவம்பர்12,13ஆடம்பர அலங்காரப் பொருட்கள்,கட்டில் மெத்தை போன்ற பொருட்கள்,இராசானம்,கமிசன் தரகுத் தொழிற் செய்வோர்கள்,மரம்,காய்கரி வியாபாரிகள்,
தபால் தந்தித் துறையினர்கள்,பத்திரிக்கைத் துறை சார்ந்தவர்கள் ஆகியோர்கள் லாபம் அடைவார்கள்.செய் தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகளில் மேலும் சற்று பொறுமை
யைக் கடைப்பிடிக்கவும்.நவம்பர்14,15,16அண்டைஅயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது.யாத்திரையில ;குழந்தைகளை எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்ளவும்.புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடன்களை அடைக்க வாய்ப்பு உள்ளது.வீடுகளில் கவனமுடன் இருந்தால் திருட்டுப் போவதை தடுக்கலாம்.குழந்தைகளின் மன மகிழ்ச்சிக்காக வெளியூர் பிரயாணங்களை மேற் கொள்ள நேரிடும்.நவம்பர்17,18புதிய ஆடைஅணிகலன் ஆபரணங்களை வாங்குவீர்கள்.நண்பர்கள் மற்றும் உரவுகளின் மூலமாக எதிர் பாராத பொருட் செலவுகள் வரக் கூடும். யாத்திரையில் கவனமுடன் பயணம் செய்ய
வும்.இது வரை விடை காண முடியாத நோய்களுக்கு விடை காணும் காலமாகும்.தந்தை மகன் உறவில் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளதால் கவனமுடன் இருக்கவும்.உடம்பில் முதுகு மற்றும் கால்களில் நோய்கள் வந்து விலகும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற் பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்க
பரிகாரம்:-மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

10.மகரம்:-மகரராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும்..நவம்பர்12,13,14பங்குத்தொழிலில் ஓரளவ முன்னேற்றம் காணுவீர்கள்.நீண்ட காலமாக வராத கடன் கொடுத்த பணம் திரும்பிக் கை வந்து சேரும். காதல் விசயத்தில் நல்ல தகவல்கள் வந்து சேரும்.அரசு வழக்குகளில் அநுகூலமான தீரப்;புகள் கிடைக்கும். உடல் நிலையில் கண் காதுகளில் கவனமுடன் இருக்கவும். யுhத்திரைகளால் எதிர் பார்த்த காரியங்கள் நிறைவேற இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம்.நவம்பர்15,16 பங்காளிகளுடன் சேர்ந்து புதிய தொழில்கள் ஆரம்பம் செய்ய போட்ட திட்டங்கள் நிறை வேறும்.பிறர் நடத்திக் கொண்டிருக்கும் தொழில் ஸ்தாபனங்களை வாங்குவதற்கான முயற்சிகளில் நண்பர்களின் ஆதரவுகள் மூலம் நிறை வேறும்.குல தெய்வ வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகள் தடையின்றி நிறை வேறும்.நவம்பர்17,18புதிய நண்பர்களின் சேர்க்கையால் மன மகிழ்ச்சி உண்டாகும்.பழைய வாகனங்களை விற்றுப் புதிய வாகனங்களை வாங்கும் முயற்சிகள் நிறைவேறும் காலமாகும். விவசாயம் செய்வோர்கள்,காய்கறிகள்,பழ வியாபாரிகள்,பூஜை பொருள்,உப்பு வியாபாரிகள்,தண்ணீர் கூல்டிரிங்ஸ் போன்ற உணவு வியாபாரிகள் மற்றும் நறுமணப் பொருள் வியாபாரிகள்,ரத்தின வியாபாரம் செய்வோர்கள் ஆகியோர்கள் நற்பலன்களை அடைவார்கள்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியன எண்:-5
இராசியன நிறம்:-பச்சை
இராசியன திசை:-வடக்கு
பரிகாரம்:-மஹாவிஷ்ணு��ஆஞ்சனேயர் வழிபாடு செய்து பாசிப்பயிறு தானம் செய்யவும்.


11.கும்பம்:-கும்பராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்.நவம்பர்12,13பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறிப் பொருளாதாரம் சீராக இருக்கும்.புதிய ஆடை அணி கலன்களை வாங்குவதற்கு முயற்சிப்பீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு மணம் ஆகும் காலமாகும்.ப10ர்வீகச் சொத்துக்களில் வெகு காலமாக இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து மன மகிழ்ச்சி அடைவீர்கள்.நவம்பர்14,15 ஒரு சிலருக்கு சொத்துக்களை விற்பதில் பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.வெளி நாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களைக் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்.பங்காளிகளுடன் சேர்ந்து புதிய கூட்டுத் தொழிற் செய்வதற்கான முயற்சிகளைச் சற்று தள்ளிப் போடவும். நவம்பர்16,17,18 குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறைந்து மன அமைதி ஏற்படும்.புதிய வீடு நிலம் கார் போன்றவை வாங்குவீர்கள்.நண்பர்கள் மற்றும் பங்காளிகளால் ஆதாயம் உண்டாகும்.கார் லாரி போன்ற வாகனத் தொழில்கள் செய்வோர்கள்,ஆடம்பர அலங்காரப் பொருட்கள்,பொருள்களின் வியாபாரிகள்,நாடகக் கலைஞர்கள்,சினிமா துறை சார்ந்தவர்கள்,நறுமணப் பொள் வியாபாரிகள், சிற்றுண்டி வியாபாரிகள்,நவரத்தினம் மற்றும் வெள்ளி வியாபாரிகள் ஆகிய இவர்களுக்கு நற்பலன் உண்டாகும். பொதுவாக இது ஒரு நற்பலன் தரக்கூடிய வாரமாகும்.
இராசியன எண்:-6
இராசியன நிறம்:-வெள்ளை
இராசியன திசை:-தென்கிழக்கு
பரிகாரம்:-மஹாலட்சுமி வழிபாடு செய்து மொச்சை தானம் செய்யவும்.

12.மீனம்:-மீனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். நவம்பர்12,13,14புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள். துலை தூரப் பயணங்களில் மிகவும் கவனமுடன் சென்று வரவும். உடம்பில் நரம்பு மற்றும உணவுக் குழல் சம்பந்தமான பீடைகள் உண்டாகும். இரும்பு இயந்திரம் இரசாயன சம்பந்தமான தொழில்கள், எண்ணை வியாபாரம் செய்வோர்கள்,பெட்ரோல் டீசல் வியாபாரிகள், பலசரக்குத் தொழில் வியாபாரம் செய்வோர்கள்,பழைய இரும்புப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவரர்கள்.நவம்பர்15,16 அரசியல் வாதிகளுக்கு புதிய பதவிகளும் மற்றும் நற்பெயர் புகழும் உண்டாகும் காலமாகும். பிள்ளைகளுக்கு இதுவரையில் தடை பட்டு வந்த திருமண போன்ற சுப காரியங்கள் நிறை வேறும்.தாய் தந்தைகளுக்கு உடல் நிலையில் சிற்சில பாதிப்புகள் வந்து விலகும்.நண்பர்களால் சிற்சில பிரச்சனைகள் வந்து விலகும். நவம்பர்17,18 உத்தியோகம் பார்ப்பவர்கள் மேலதிகாரிகளிடம் முன் கோபத்தை தவிர்த்து மிகவும் எச்சரிக்கையுடன் பணி ஆற்றுதல் நல்லது.கண் மற்றும் காதுகளில் கவனம் தேவை. தனப் புழக்கம் நன்றாக இருக்கும். காதல் சம்பந்தமான விசயங்களில் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும்.நீண்ட காலமாக வங்கிகளில் இருந்து எதிர் பார்த்த பணம் கிடைக்கும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-8
இராசியான நிறம்:-நீலம்
இராசியான திசை:- தென் மேற்கு
பரிகாரம்:-ஐயப்பன் வழிபாடு செய்து எள் தானம் செய்யவும். தொடரும்!

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top