புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

         சென்னையை அடுத்த பல்லாவரம் பொழிச்சலூர் கவுல் பஜார் அருகே உள்ள மைதானத்தில் கடந்த 10-ந் தேதி, முகம் சிதைக்கப்பட்ட நிலையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. சங்கர்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தியதில், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் சென்னை நந்தனம் ஜோகி தோட்டத்தை சேர்ந்த குமார் என்பது தெரியவந்தது.

குமாரின் மனைவி சாரதா (37) போலீஸ் நிலையத்திற்கு வந்து கொலை செய்யப்பட்டது தனது கணவர் தான் என உறுதிப்படுத்தினார். பிரேத பரிசோதனைக்கு பிறகு குமாரின் உடலை சாரதாவிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில், தென் மண்டல இணை ஆணையர் திருஞானம், பரங்கிமலை துணை கமிஷனர் சரவணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஹயாத்துல்லா, தங்கசாமி, சந்திரன், செந்தில் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். குமார் ஆட்டோ டிரைவர். இவருக்கு சாரதா என்ற மனைவியும், காயத்ரி என்ற மகள், சீனிவாசன் என்ற மகன் உள்ளனர். காயத்ரிக்கு திருமணமாகி கணவர் முருகனுடன் தனியாக வசித்து வருகிறார். சீனிவாசனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. குமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. சாரதா 2 ஆட்டோக்களை வாடகைக்கு விட்டு சம்பாதித்து வந்தார்.

சாரதாவிடம் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்த மோகன் (55) மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் குமாரின் இறுதி ஊர்வலத்தில் தனிப்படை போலீசார் மாறுவேடத்தில் கலந்து கொண்டு மோகனை கண்காணித்தனர். சந்தேகத்தின் பேரில் மோகனை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அப்போது அவர், குமாரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார், அவர் கொடுத்த தகவலின் பேரில் குமாரின் மனைவி சாரதா, ஆட்டோ டிரைவர் சுரேஷ் (23) ஆகியோரையும் கைது செய்தனர். கைதான 3 பேரிடம் நடத்திய விசாரணையில் வெளியான தகவல்கள் வருமாறு:-

சாரதாவிடம் தொடர்ந்து வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்த மோகன், மனைவி பிள்ளைகளுடன் வசித்து வந்தார். தினமும் ஆட்டோ எடுக்க வரும்போது சாரதாவுடன் நட்பாக பழகினார். ஆட்டோவில் வரும் வருமானத்தை சாரதாவிடம் ஒப்படைத்து வந்தார். இதனால் நாளடைவில் மோகனுக்கும், சாரதாவிற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு, இருவரும் உல்லாசமாக வாழ்ந்து வந்தனர்.

இவர்களின் கள்ளக்காதல் குமாருக்கு தெரியவர, அவர் சாரதாவிடம் தகராறு செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சாரதா, கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள கணவரை தீர்த்துக்கட்டுமாறு கள்ளக்காதலன் மோகனிடம் கூறினார். குமாரை தீர்த்துக் கட்டினால் எந்த இடையூறும் இல்லாமல் சாரதாவுடன் உல்லாசமாக இருக்கலாம் என கருதிய மோகன், குமாரை கொலை செய்ய சாரதாவின் மற்றொரு ஆட்டோவை ஓட்டும் சுரேஷ் (23) என்பவரையும் சேர்த்துக் கொண்டார்.

அதன்படி மோகன், சுரேஷ் இருவரும் கடந்த 9-ந் தேதி இரவு 9 மணிக்கு குமாரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சைதாப்பேட்டை ஆட்டுத் தொட்டி அருகில் உள்ள மதுபான கடைக்கு சென்றனர். அங்கு அளவுக்கு அதிகமாக குமாருக்கு மது வாங்கிக் கொடுத்து, அவரை ஆட்டோவில் ஏற்றி சி.ஐ.டி. நகர், சைதாப்பேட்டை, கிண்டி என சுற்றினார்கள்.
 அப்போது ஆட்டோவில் மயங்கிய நிலையில் கிடந்த குமாரின் கழுத்தில் காலால் மிதித்து கொலை செய்ய முயன்றனர். ஆனால் அவர் உயிர் போகவில்லை. ஆட்டோவை விமான நிலையம் பின்புறம் உள்ள சாலையில் கவுல் பஜாரில் இருட்டான பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு மைதானத்தில் குமாரை ஆட்டோவில் இருந்து கீழே தூக்கிப் போட்டு, அவரது கழுத்தை காலால் மிதித்தும், பல இடங்களில் எட்டி உதைத்தும் கொலை செய்தனர்.

அருகில் கிடந்த கல்லை தூக்கி அவரது தலையில் போட்டு முகத்தை சிதைத்து விட்டு தப்பிச் சென்று விட்டனர். பின்னர் ஒன்றுமே நடக்காதது போல நந்தனம் பகுதியில் வழக்கம் போல தங்கள் வேலையில் ஈடுபட்டனர். போலீஸ் விசாரணையில் இந்த தகவல்கள் தெரியவந்தன.

குமார் கொலை செய்யப்பட்டதில் இருந்து சாரதாவும், மோகனும் அடிக்கடி செல்போனில் தகவல் பரிமாற்றம் செய்து கொண்டிருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. போலீசில் ஒன்றும் தெரியாதது போல நடித்தால் தப்பி விடலாம் என சாரதாவும், மோகனும் நினைத்தனர். பிரேதபரிசோதனைக்கு பின்னர் குமாரின் உடலை வாங்க சாரதாவை ஆட்டோவில் பல்லாவரம் வரை மோகன் அழைத்து வந்தார்.

ஆனால் போலீசை பார்க்க பயந்து, சாரதாவை அங்கேயே இறக்கிவிட்டு திரும்பிச் சென்று விட்டார். சாரதா மட்டும் அப்பாவி போல போலீசாரிடம் நாடகமாடி கணவரின் பிணத்தை பெற்றுச் சென்றார். போலீசாரின் கிடுக்கிப்பிடியில் கள்ளக்காதலன் போட்ட திட்டம் தவிடுபொடியானது. போலீசார் அதிரடி நடவடிக்கையில் கொலையாளிகள் 3 பேரும் சிக்கினர்.

விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரும் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top