
கடந்த 2010ம் ஆண்டு மது அருந்தி விட்டு தன் பியூட்டி பார்லரிலிருந்து காரில் நூரியா வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் "மரைன் டிரைவ்" என்ற இடத்துக்கு அருகே வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் நின்ற பொலிஸ் வாகனம் மீது பலமாக மோதியதில் பொலிஸ்காரர் ஒருவரும் அருகில் நின்று கொண்டிருந்த மற்றொருவரும் உயிரிழந்தார்.
நூரியா மீது மது குடித்து வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து மும்பை நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டதில் போதையுடன் கார் ஓட்டி இரண்டு பேர் இறப்பதற்கு காரணமாக இருந்த நூரியாவுக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனையும், ஐந்து லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
0 கருத்து:
கருத்துரையிடுக