புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஜேர்மனியின் பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் முதன் முறையாக முழு உடலையும் பரிசோதனை செய்யும் ஸ்கேனர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இத்தகவலை காவல்துறையின் தகவல் தொடர்பாளர்
கிறிஸ்ட்டியன் அல்ட்டென் ஹோஃபென் தெரிவித்தார்.

மேலும் கூறுகையில், அதிகளவு பாதுகாப்பு தேவைப்படும் நாடுகளுக்கு செல்பவர்களிடம் மட்டுமே இந்த அதிநுட்ப முழு உடல் பரிசோதனை நடத்தப்படும் என்றும் மற்ற பயணிகளுக்கு வழக்கமான பரிசோதனைகள் மட்டுமே நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த முழு உடல் ஸ்கேனர் கருவிக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் உடல்நலத்துக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு முன்னர் விமான நிலையத்தில் இருந்த ஸ்கேனர்கள் பல நேரங்களில் தவறாக அபாய மணியை ஒலிப்பதால் தேவையில்லாத பயமும், படபடப்பும் ஏற்படுகிறது.

புதிய ஸ்கேனரில் இந்தத் தொல்லை இல்லை என்று உள்துறை அமைச்சர் ஹேன்ஸ் - பீட்டர் ஃபிரீட்ரிக் தெரிவித்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top