புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இயற்கை எழில் மிக்க ஈழவழ நாட்டின் வடபால் உள்ளது யாழ்ப்பாணம். இதன் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள வலிகாமம் கல்வி,

செல்வம், விவசாயம் ஆகிய வளங்களைக் கொண்டது.இதில் முன்பு சோழபுரம் என்று அழைக்கப் பட்ட சுழிபுரம் கிராமம் உள்ளது. சுழிபுரம் என்றதும் திருவடிநிலைத் தீர்த்தம், பறாளாய் விநாயகர், முருகன் ஆலயங்களும், கற்புக்கரசி கண்ணகை அம்பாள் ஆலயமும், சம்புநாதர் ஆலயமும் நினைவுக்கு வரும். இத்தகைய சிறப்பு வாய்ந்த கிராமத்தின் வடபகுதியில் வாழ்ந்தவர்கள் செட்டியார்கள் என்றழைக்கப்படும் சைவகுலத்தவர்.


இத்தகைய சைவவைசிகருள் மிகச் சிறப்புடன் வாழ்ந்தவர் இராமலிங்கம் கார்த்திகேசு. இவருடையமனைவி அன்னப்பிள்ளை.இத் தம்பதியினருக்கு மூத்த புதல்வராக 1885ம் ஆண்டு பேரனின் பெயரைக் கொண்ட கார்த்திகேசு அவர்கள். இவர் பிற்காலத்தில் 'செட்டியார்' என்றும், 'தம்பையா வாத்தியார்' என்றும்(அதாவது திரு.கார்த்திகேசுவின் வீட்டுப் பெயர்) , 'தம்பையாச் சட்டம்பியார்' என்றும் அன்புடன் அழைக்கப்பட்டார். இவரே ஆறுமுக வித்தியாசாலையின் ஸ்தாபகர் ஆவார். அத்துடன் அப் பாடசாலையின் நீண்டகால அதிபாராயும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சிறுவயதிலிருந்தே கல்வி கற்பதில் மிக்க ஆர்வம் கொண்டு, நன்கு கற்று சிரேஷ்ட தராதரப் பரீட்சையில் தேர்ச்சி பெற்றார்.கல்வி அறிவைத் தான் பெற்றதுபோல் தனது கிராமத்தில் உள்ள பிள்ளைகளும் பெறவேண்டும் என்ற ஆர்வத்தாலும், வித்தியாதானமதே மேலானது என எண்ணியதாலும் 1905ம் ஆண்டளவில் ஒரு பள்ளிக் கூடத்தை உருவாக்க எண்ணினார்

ஒரு பாடசாலை உருவாக்க வேண்டும் என்ற தனது எண்ணத்தை சுழிபுரம் மேற்கில் வசித்து வந்த தனது நண்பர்களாகிய நொத்தாரிசு சுப்பிரமணியம் அவர்களிடமும், சங்கரப்பிள்ளை என்பவரிடமும் கூறி, ஆலோசனை கேட்டார். அவர்களின் யோசனைப்படி பாடசாலை கட்டுவதற்கு நிலம் தேவைப்பட்டது. அதற்குச் சட்டம்பியார் கார்த்திகேசு தனது தந்தையார் தனக்கு முதிசமாகக் கொடுத்த நிலத்தில் ஒரு பகுதியைப் பள்ளிகூடம் கட்டுவதற்காக முன்வந்தார். உருவாக்கச் செலவின் ஒரு பகுதியை நொத்தாரிசு சுப்பிரமணியம் அவர்களும், சங்கரப்பிள்ளை அவர்களும் மற்றும் பல நண்பர்களும் பங்கேற்றும் கொண்டனர். இராமலிஙம் கார்த்திகேசு அவர்கள் நிலத்தைக் கொடுத்தது மட்டுமலாமல் தன் உறவினர்களுடைய உதவியுலடனும் தன் கடின உழைப்பாலும் பள்ளிக்கூடத்தை 1910ம் ஆண்டளவில் உருவாக்கினார்.

மேலும் வகுப்புகளைத் தொடங்குவதற்கு வீடு வீடாகச் சென்று மாணவர்களைச் சேர்ப்பது, இலவசமாகாக் கல்வி கற்பிப்பது, பாடசாலையை நிர்வகிப்பது போன்ற எல்லாப் பொறுப்புகளையும் கார்த்திகேசு அவர்களே ஏற்றுக் கொண்டார்.தமிழுக்கும் சைவசமயத்திற்கும் அளப்பரிய தொண்டாற்றிய ஆறுமுக நாவலர் அவர்கள் ஞாபகமாக "ஆறுமுஅவித்தியாசாலை" என்ற பெயர் அந்தப் பாடசாலைக்கு அளிக்கப்பட்டது.


நாளடைவில் மாணவர்கள் எண்ணிக்கையும் கூடத்தொடங்கியது. கூடுதலான ஆசிரியர்களும் தேவைப்பட்டனர். பாடசாலையின் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்ய போதிய நிதி இல்லாத நிலை ஏற்பட்டது. இக்கால கட்டத்தில் இந்து பரிபாலான சபை (Hindu Board of Education) பல பாடசாலைகளை நடத்தி வந்தது. இதனை அறிந்த திரு. கார்த்திகேசு அவர்கள் தான் ஆரம்பித்த பாடசாலையையும் அச் சபையிடம் கையளித்தார். அதன் பின் இந்து பரிபாலான சபைமுகமைத்துவம் (management அச்சலிங்கம்(நல்லூர்) அப்போதைய முகாமையாளர், செயலாளர்- ராஜரட்ணம்) திரு.இராமலிஙம் கார்த்திகேசு அவர்களையே தலமை ஆசிரியராக நியமித்து அப் பாடசாலையின் வளர்ச்சிக்கும் உதவியது. இதற்கிடையில் திரு.கார்த்திகேசு அவர்கள் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியைப் பயிற்சியை முடித்து கல்விகற்பித்தலுக்குரிய தனது அறிவையும், திறமையையும் வளர்த்துக் கொண்டார்.

ஆறுமுகவித்தியாசாலை என்ற பெயருடனும், அக் கிராம மக்கள் மத்தியில் செட்டியார் கார்த்திகேசு ஆரம்பித்ததால் "செட்டி பள்ளிக்கூடம்" என்ற பெயருடனும், அப் பாடசாலை தொடர்ந்து அவ்வூர் மக்களுக்கும், அயலூர் மக்களுக்கும் தொடர்ந்து பணியாற்றியது. திரு,இராமலிங்கம் கார்த்திகேசு அவர்களும் 1953ம் ஆண்டு மார்கழி மாதம் ஓய்வு பெறும் காலம்வரை தொடர்ந்து பணியாற்றினார். அதன்பின் பாடசாலைப் பொறுப்புகளை அரசாங்கம் ஏற்றுக் கொண்டது.அதன் பயனாக ஆறுமுகவித்தியாசாலை அரசாங்க உதவியுடன் மேலும் மேலும் வளர்ச்சி அடைந்தது


எழுதியவர்:

ஞானாம்பிகை

ஆறுமுகவித்தியாசாலையின் தந்தை திரு.கார்த்திகேசுவின்

இளைய புத்திரி

கனடா

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top