புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இந்தியாவில் சாலையில் சிதறி கிடந்த ரூபாய் நோட்டுகளால் பரபரப்பு ஏற்பட்டது. நோட்டுகளை எடுக்க மக்கள் போட்டி போட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆவடி புதிய ராணுவ சாலை ரயில்வே மேம்பாலம் அருகே நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்தன. இதை, அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், பாதசாரிகள் போட்டி போட்டு எடுத்து கொண்டிருந்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து ஆவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். போலீசாரை பார்த்ததும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அங்கிருந்து ஓடினர். அங்கு 10, 50, 100, 500, 1000 ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்ததை கைப்பற்றினர். அவை உண்மையான ரூபாய் நோட்டுகள் அல்ல. சிறுவர்கள் விளையாட்டுக்காக பயன்படுத்தும் காகித நோட்டுகள் என்பது தெரிந்தது.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சிவகுமார் விசாரணை நடத்தினார். தீபாவளியை முன்னிட்டு ஜேம்ஸ் பாண்ட் 007 என்ற புதிய ரக பட்டாசு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை வெடிக்கும்போது ரூபாய் நோட்டுகள் காற்றில் பறந்து விழும். அந்த வகையில் இந்த பட்டாசு தயாரிக்கப்பட்டுள்ளது. அப்படி வெடித்த வெடியில் இருந்துதான் இந்த காகித நோட்டுகள் சிதறியது என்று விசாரணையில் தெரிய வந்தது.

இதுகுறித்து பொது நல ஆர்வலர்கள் கூறும்போது, ‘சிறுவர்களுக்கு விளையாட்டுக்காக கடைகளில் காகித ரூபாய் நோட்டுகள் விற்பனை செய்வதையும், ரூபாய் நோட்டுகள் வெடித்து சிதறும் வகையில் பட்டாசுள் தயாரிப்பதையும் தடுத்து நிறுத்த வேண்டும். ரூபாய் நோட்டுக்கு மதிப்பளிக்க வேண்டும். அதை அவமதிக்க கூடாதுÕ என்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top