புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


போடி அருகே தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள துரைராஜபுரத்தைச் சேர்ந்தவர் பவுனீஸ்வரி(38). அவரது கணவர் அசோகன் இறந்துவிட்டார். கணவரின் இறப்புக்கு பிறகு தங்கையின் பராமரிப்பில் அவர் இருந்து வருகிறார். இந்நிலையில் பவுனீஸ்வரியின் தங்கை கணவர்
ராமர் மகன் கண்ணன் (40) அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

அதற்கு பவுனீஸ்வரி எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அவரை கண்ணன் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் பவுனீஸ்வரி காயம் அடைந்துள்ளார். இது குறித்து போடி புறநகர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் அருணன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர். பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

விதவைப் பெண்ணை அவரது உறவினரே கற்பழிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top